தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 31 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சிவகாமியின் அந்த பரிவான பேச்சு பிடித்திருக்கவே, அமைதியாக புன்னகைத்தாள் கீதா.
கீதாவின் புன்னகை பெரியவளின் முகத்தில் நிம்மதியை வரவழைத்தது!
“கிருத்திகா அப்படி தான்! பட்டு பட்டுன்னு ஏதாவது பேசுவா. நீ எதையும் மனசில வச்சுக்காதேம்மா. உன்னைப் பத்தி விஜய் சொன்ன போதே எனக்குப் பிடிச்சிருந்தது. இப்போ நேருல பார்த்தப்புறம், ரொம்ப பிடிச்சிருச்சு. இவ்வளவு அழகான பொண்ணை நான் பார்த்ததே இல்லை!”
“சித்தி!” என்ற விஜய்யின் குரல் பக்கத்தில் கேட்டது.
“சரிடா, நான் எதுவும் பேசலை, நீயே பேசிக்கோ,” என அவன் சித்தி சொல்லிக் கொண்டிருக்க, கீதா விஜயின் குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தாள்.
அதற்காகவே காத்திருந்ததுப் போல அவளை பார்த்து புன்னகை புரிந்தான் விஜய்.
இதற்கு முன் பல தடவை அவனை சந்தித்திருந்தாலும், இன்று அவனை பார்ப்பதும், அவனின் அந்த புன்னகையும் கீதாவை புதிய மாதிரியாக என்னவோ செய்தது.
“நீ ஏன்மா நிக்குற, உட்காரு,” என்று அவன் சித்தி சொல்ல,
“நீங்களும் உள்ளே வாங்க, நாம உள்ளே போய் பேசலாம்,” என்ற கீதாவின் அம்மா சாரதா, அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.
அறையில், இரண்டு பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதும், கீதாவின் மனம் முழுவதும் அந்த ‘சின்ன’ புன்னகையிலேயே உழன்றுக் கொண்டிருந்தது.
நேரம் மெல்ல செல்ல, விஜய் கிருத்திகாவுடன் அந்த அறைக்கே வந்தான்.
இரண்டு பெரியவர்களும் அவர்களை கேள்வியாக பார்க்கவும்,