(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“வீடு சுத்தி பார்த்துட்டு இருந்தோம் சித்தி,” என்றான் விஜய்.

   

பெரியவர்கள் இருவரும் புரிந்துக் கொண்ட பாவனையில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். பின் சிவகாமி,

   

“வீட்டை சுத்தி பார்க்கிறீயா, பாரு பாரு! கீதா கிட்ட பேசுறதா இருந்தாலும் பேசு. நாங்க தேதி முடிவு செய்துட்டாங்களான்னு கேட்டுட்டு வரோம்,” என்று சொல்லியப்படி எழுந்துக் கொண்டாள். கூடவே சாரதாவும் எழுந்துக் கொண்டாள்.

   

பெரியவர்கள் இருவரும் அறையில் இருந்து சென்றுவிட, கீதாவின் ஸ்பெஷல் ‘ரயில் வண்டி’ மீண்டும் அவளின் தலைக்குள் வந்து எட்டி பார்த்தது. தயக்கத்துடன் எழுந்து நின்றாள் அவள்.

   

“ஓ மை காட், இவனை பார்த்தா எழுந்து நிக்குறீங்க? ஐ கேனாட் பிலீவ் இட்,” என்றாள் கிருத்திகா. இப்போது குரலில் ‘என்ன நீ எல்லாம்..’ எனும் தோரணை இருந்தது!

   

கீதா இதற்கு என்ன மாதிரியான பதில் சொல்வதென்று யோசித்தாள்!

   

அவள் யோசித்து முடிக்கும் முன்பே கிருத்திகாவே பேசினாள்!

   

“நான் இவனுக்கு எப்படி எல்லாமோ பொண்ணு கண்டுபிடிக்கனும்னு ப்ளான் வச்சிருந்தேன். இவன் இப்படி ஃப்ளாப் ஆவான்னு நான் நினைக்கலை. உண்மையா சொல்லனும்னா, எனக்கு உங்களை பிடிக்கலை. ஆனால், இந்த விஜய் வேற ஏதோ ஆசை படுறான்...”

   

இப்படி கூட ஒருத்தியால் முகத்திற்கு நேரே பேச முடியுமா?

   

கீதா நம்ப முடியாமல் அவளைப் பார்த்தாள்!

   

“இவன் கல்யாணம், இவனுக்கு பிடிச்சிருக்கு, நான் என்ன செய்ய முடியும்??? பட் உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லுங்க, உங்களை நான் காப்பாத்துறேன்!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.