(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“அப்புறம்???”

   

“ம்ம்ம்ம்... தெரியலை...” என்றாள் கீதா தயக்கத்துடன்.

   

“ஹ்ம்ம்... இது சரி இல்லையே,” என்று அவன் ஒரு அடி எடுத்து வைக்க, அவள் இரண்டடி பின்னே தள்ளி நின்றாள்.

   

அதை கவனித்தாலும், காட்டிக் கொள்ளாமல்,

   

“நீ சொன்னது போலவே அம்மா அப்பா சம்மதத்தோட உன்னை பார்க்க வந்தாச்சு, இப்போ உனக்கு சந்தோஷம் தானே?” எனக் கேட்டான் விஜய்.

   

“ம்ம்ம்ம்...”

   

“அம்மா, அப்பா, பிரின்சஸ், தம்பிங்க, ஏன் தியாகுவை கூட ரொம்பவே தாஜா செய்தேன்.”

   

“ம்ம்ம்ம்...” என்றவளின் பார்வை கிருத்திகா சென்ற பக்கம் சென்றது.

   

“பிரின்சஸ் பத்தி யோசிக்குறீயா? அவ அப்படி தான். நேரா முகத்துல அடிச்ச மாதிரி பேசுவா. எங்க வீட்டுல ஒரே பொண்ணாச்சே ரொம்ப செல்லம். நாங்க எல்லாம் செல்லம் கொடுத்து, கொடுத்து அவ இப்படி பேட் பாய் ஆகிட்டா! நாங்க எல்லாம் அவளை பார்த்து பார்த்து குட் பாய்ஸ் ஆகிட்டோம்,” என்றபடி மெல்ல கீதாவின் அருகே வந்து அவளின் கையை பிடித்தான் விஜய்.

   

கீதா திகைத்து போய் பார்க்க,

   

“இந்த வளையல் அழகா இருக்கேன்னு பார்த்தேன்,” என்றான் புன்னகையுடன்!

   

கீதா வெட்கத்துடன் நிற்க,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.