(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“ஆனால்... இப்போ... அந்த வளையலை விட, அது இருக்க கை அழகா இருக்கு... சோ... இந்த அழகு கைக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் தரலாம்,” என்றவன், பாக்கெட்டில் இருந்து சின்ன நகை பெட்டியை எடுத்து, திறந்து, அதில் இருந்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான்.

   

“உனக்காக நானே வாங்கினது... பிடிச்சிருக்கா???”

   

“ம்ம்ம்ம்...”

   

அவன் அவளுக்காக தனியாக வாங்கி வந்தான் என்பதிலேயே கீதாவின் மனம் குளிர்ந்துப் போனது! என்ன தான் வேறு விலை உயர்ந்த நகைகள் இருந்தாலும் அவளவன் அவளுக்காக கொடுப்பது எப்போதும் ஸ்பெஷல் தானே! அந்த மோதிரத்தின் விலை பற்றியோ, அதன் தரம் என்ன என்பது பற்றியோ அவளுக்கு யோசிக்க கூட தோன்றவில்லை! விஜய் அவளுக்காக வாங்கி வந்தான் என்பதே அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது! அதனால் மோதிரத்தில் இருந்த விலை உயர்ந்த கல்லிற்கு இணையாக கீதாவின் கண்களும் காதலுடன் மின்னியது! 

   

அவளின் மனதை உணர்ந்துக் கொண்டவனாக விஜயின் முகமும் மலர்ந்தது!

   

அவர்கள் இருவரின் மனங்களும் ஒன்றாகி, அவர்களின் காதல் மெல்ல முதலடி எடுத்து வைத்த அந்த கணத்தில், புயலென உள்ளே வந்தாள் கிருத்திகா.

   

“டேய் விஜய், இன்னும் இங்கே என்ன செய்துட்டு இருக்க? வா... நான் ஆஃபிஸ் போகனும், என்னை ட்ராப் செய்றேன்னு சொன்னீயே,” என்றபடி விஜயை கிட்டத்தட்ட இழுத்து சென்றாள். கீதாவை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை!

   

விஜய் கீதாவை திரும்பி பார்த்து அவனின் வழக்கமான சின்ன புன்னகையுடன் சென்றாலும் கூட, கிருத்திகா அழைத்த உடன் அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றது கீதாவை யோசிக்க வைத்தது!

    

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Rojavai thalattum thendral story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.