தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 84 - பிந்து வினோத்
84. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ஆனந்த் நாம எங்கே தான் போறோம், சொல்லுங்களேன் ப்ளீஸ். அப்படி என்ன சஸ்பென்ஸ் வேண்டி இருக்கு?”
பாரதி சிணுங்கலும் கோபமும் கலக்க கேட்ட விதத்தை ரசித்து சிரித்தான் விவேக்!
பாரதி கோபத்துடன் முறைக்கவும்,
“அங்கே போய் சேரும் போது நீயே தெரிஞ்சுப்ப ரதி! இப்போ டைமை வேஸ்ட் செய்யாம தூங்கு. அப்புறம் எனக்கு தூக்கம் வருதுன்னு புலம்ப கூடாது,” என்றான் விவேக் கொஞ்சலாக!
“ப்ச்...”
“என் செல்லம்ல ரதி நீ! உனக்கு தெரியாம இருந்தா தானே கண்ணா அது சஸ்பென்ஸ்!”
“ம்ம்ம்...”
“இன்னும் கொஞ்சோண்டு நேரம் உன்னுடைய ஆர்வத்தை அடக்கிக்கோ...”
“ப்ச்...” என்று மீதும் அலுத்துக் கொண்டு கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்ட பாரதி, அவனின் சட்டையை பிடித்து விளையாடியப்படியே தூங்கிப் போனாள்.
பாரதி தூக்கத்தில் இருந்து விழித்தப் போது, அவர்களின் கார் ஏதோ ஊரில் சென்றுக் கொண்டிருந்தது. கார் சீட்டில் நேராக நிமிர்ந்து அமர்ந்து, கண்களை கசக்கி பார்த்தவளால், முதலில் நம்பவே முடியவில்லை!
“விவேக் இது... இது... நாம...”
பாரதி திக்கி திணறுவதை ரசனையோடு பார்த்த விவேக்,
“கரெக்ட் ரதி, நீ பிறந்து வளர்ந்த ஊர் தான் இது,” என்றான்.