(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

“என்ன நீ, நான் என்னவோ எந்த வேலையுமே செய்யாத மாதிரி சொல்ற?”

   

“மாதிரி என்ன? அது தான் உண்மையும் கூட!”

   

“ஹேய்... இப்படியே சொல்லிட்டு இருக்காதே, வேண்டாம், எனக்கு அப்புறம் கோபம் வரும்!”

   

“நிஜமாவா? எங்கே கோபப் படுங்க பார்ப்போம்!!”

   

“நீ ரொம்ப மோசம் ரதி!”

   

“ஆனாலும் உங்க அளவுக்கு இல்லை ஆனந்த்...”

   

ஓயாமல் பேசியபடி மாலை நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்! மெல்லிய இருள் படர தொடங்கி இருந்ததால் பக்கத்தில் இருந்தவர்கள் யாருமே அவர்களை கவனித்தாக தெரியவில்லை!

   

காரில் இருந்து இறங்கிய பாரதிக்கு பழைய நினைவுகள் மனதில் ஓடியது. துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த பள்ளிபருவம் அவளின் முன்னே வந்து நின்றது. தாயின் கனிவான முகமும், தந்தையின் அன்பு பொங்கும் முகமும் கண் முன் தோன்றியது...

   

பாரதியின் மனநிலையை புரிந்துக் கொண்டு, அவளருகில் சென்று தோளோடு அணைத்துக் கொண்ட விவேக்,

   

“உனக்கு அப்பா, அம்மாவா நான் இருக்கேன் பாரதி... அத்தையும் மாமாவும் கட்டாயம் நம்மை வாழ்த்திட்டே தான் இருப்பாங்க,” என்றான்.

   

விவேக் அதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டின் முன் இருந்த பூவரசம் மரத்தில் இருந்து அழகிய மஞ்சள் மலர் பாரதி மீது வந்து விழுந்தது!

   

பெற்றோரே சொர்க்கத்தில் இருந்து ஆசீர்வாதம் செய்து விட்டதுப் போல அவளின் மனம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.