“ஹனிமூன்ல வேற என்ன செய்வாங்களாம்?”
அதை சொல்லிக் கொண்டே பாரதியின் அருகில் வந்து அவளை அணைத்து கைகளில் தூக்கிய விவேக்,
“சொல்லுங்க மஹாராணி, எந்த பக்கம் போகனும்?” என்றான்.
“ப்ளீஸ்ங்க, ரொம்ப தூசா இருக்கும். சொன்னா கேளுங்க!”
“தூசா இருந்தா இருக்கட்டும்...”
“விவேக்! சொன்னால் கேட்கனும்!!!”
“அந்த பழக்கமே எனக்கு கிடையாதே!!! சரி, நீ எந்த பக்கம் போகணும்னு சொல்லலைனா என்ன, நானே கண்டுபிடிச்சுக்குறேன்...”
பாரதியை கையில் ஏந்தியபடி நடந்த விவேக், உத்தேசமாக ஒரு அறை பக்கம் செல்ல, இவன் எப்படி சரியாக அவளின் அறைக்கே செல்கிறான் என்று மனதுள் வியந்தப் படி,
“ஆனந்த், ஃபைவ் மினிட்ஸ் கொடுங்க போதும், நான் வேலையை முடிச்சிட்டு...” என்று சொல்லிக் கொண்டிருந்த பாரதி, எங்கிருந்தோ வந்த பூ வாசனையில் பேச்சை நிறுத்தினாள்.
“என்ன ரதி கண்ணா, தூசியா இருக்கும்னு சொன்ன, இங்கே ஒரே பூவா இருக்கு???”
அவளின் அறையில் இருந்த பூவால் அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த கட்டிலை பார்த்து ஆச்சர்யப் பட்டுக் கொண்டிருந்த பாரதி, விவேக்கின் போலியான ஆச்சர்யத்தை புரிந்துக் கொண்டு,
“எல்லாம் உங்க வேலையா? ஆனால் சாவி? ஓ.... கிஷோர் மாமா செய்தாரா??? ஆனால் உங்களுக்கு எப்படி அவரை தெரியும்?” என்றாள் கேள்வியுடன்!