“அப்போ அந்த வீட்டுக்கா போறோம்?”
“அது என்ன அந்த வீடு? உன்னுடைய அம்மா அப்பா வீடு! நீ பிறந்த வீட்டுக்கு தான் போறோம்.”
பாரதி உதடுகளை இறுக்க மூடிக் கொண்டாள்!
“என்ன ரதி அமைதியா இருக்க?”
“இதை நான் எதிர்பார்க்கலை ஆனந்த்...”
“எதிர்பார்க்காததை செய்றது தான் பேபி சர்ப்ரைஸ்...”
“க்கும்...”
“உங்க அம்மா அப்பா கிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கனும் தானே? உன் வீட்டுல இன்னும் அவங்களோட எண்ண அலைகள் கட்டாயம் இருக்கும்.”
“ம்ம்ம்...”
“கோபமா?”
“ச்சேச்சே அதெல்லாம் இல்லை. நீங்க முன்னாடியே என் கிட்ட சொல்லி இருந்தா, வீட்டை சுத்தம் செய்து வைக்க சொல்லி இருந்திருக்கலாம். நான் இங்கே வந்தே கிட்டத்தட்ட இரண்டு வருஷம் மேல ஆகப் போகுது. வீடு ரொம்ப தூசியா இருக்கும்.”
“சரி, போய் பார்த்துக்கலாம்!”
“அடடா!!! யாரு பாக்குறது, விவேக் மஹாராஜாவா? நடக்குற விஷயம் தானா அது?”