குளிர்ந்தது.
பாரதியின் மனதை திசை திருப்ப விரும்பிய விவேக்,
“என்ன ரதி எவ்வளவு நேரம் என்னை இப்படியே வெளியே நிக்க வைக்குறதா ப்ளான்? வீட்டு சாவி இருக்கு தானே? உன் கிட்ட சாவி இருக்கும்ங்கற தைரியத்தில் தான் ஒன்னுமே சொல்லாம உன்னை இங்கே அழைச்சுட்டு வந்தேன்! கதவை திறக்கலாமே??”
“சாரி ஆனந்த்... இதோ திறக்கிறேன்... வீட்டு சாவி எப்போவுமே என்னோட பர்ஸில் இருக்கும். வீடு ரொம்ப தூசியா இருக்கும், நீங்க இங்கேயே இருங்களேன். நான் க்விக்கா க்ளீன் செய்து முடிச்சிட்டு கூப்பிடுறேன்...“
“வேண்டவே வேண்டாம் ரதி! அப்புறம் நான் வேலையே செய்றதில்லைன்னு நீ டீஸ் செய்வ, நானும் வரேன்!”
சொல்லிக் கொண்டே காரில் இருந்த பெட்டிகளை விவேக் கையில் எடுக்க, பாரதியும் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்காமல் வேகமாக சென்று கதவை திறந்தாள். வீட்டின் உள்ளே சென்று கையை துழாவி ஸ்விட்சைப் போட்டவள், வாசல் பக்கம் திரும்பி அங்கே நின்றிருந்த விவேக்கிடம்,
“வாங்க, வாங்க, மிஸ்டர் விவேகானந்தன்! உங்க வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க! இது தான் நீங்க மாலையிட்டு மணம் புரிந்த பாரதி தேவியின் அரண்மனை,” என்றாள் ‘ட்ராமா’ தன்மையுடன்!
வீட்டினுள்ளே வந்து பெட்டிகளை ஒரு பக்கமாக வைத்து விட்டு, கதவை தாளிட்ட விவேக்,
“வரவேற்பு எல்லாம் பலமா இருக்கே மஹாராணிஜி, அரண்மனையில் அந்தபுரம் எந்த பக்கமோ?” என்றான் அவளின் தோரணையிலேயே!
“ப்ச் ஆனந்த்!!! வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சா?”