கீதா பதில் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கூட இல்லாமல் விழித்தப் படி நின்றாள்!
“பிரின்சஸ், உன்னை சித்தி கூப்பிடுறாங்க,” என தங்கையிடம் சொன்னான் விஜய்.
“ஹ்க்கும்! அம்மா கூப்பிட்டா எனக்கு கேட்காதாக்கும்? உனக்கு அவங்க கூட தனியா பேசனும்னா டீசன்டா அதை சொல்லு! அதை விட்டுட்டு ஏன் பொய் பேசுற?” கிருத்திகா விஜயிடமும் அதே ‘ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் அட்டாக்’ பேச்சை தான பேசினாள்!
விஜய் அதைப் பற்றிய கவலையே இல்லாதவனாக, “ஹி ஹி ஹி!” என அசடு வழிந்தான்!
“முடியலைடா விஜய்! பயந்துற போறாங்க, பார்த்து!”
கிருத்திகா சொல்லிவிட்டு அறையை விட்டு செல்ல, கீதா இன்னமும் தன்னிலைக்கு வராமல் அவள் போன திசையையே பார்த்திருந்தாள்!
விஜய் கீதாவின் அருகே வந்து நெருங்கி நின்றான்.
“கீத்ஸ்!”
கிருத்திகாவின் பேச்சை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த கீதாவிற்கு அப்போது தான் விஜய்யுடன் தனியாக அந்த அறைக்குள் இருப்பது உரைத்தது.
அவ்வளவு தான்! ஒய்வு எடுத்துக் கொண்டிருந்த அவளின் ரயில் வண்டி முழு வேகத்தில் மீண்டும் தலைக்குள் ஓட துவங்கியது!
“ஹேய் கீத்ஸ், ஏன் இப்படி என்னை பார்த்து பயப்படுற?”
“பயம்னு இல்லை...”