(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

அந்த அளவிற்கா அவளை விரும்புகிறான்???

   

இத்தனைக்கும் அவள் அவனை அதிகமாக சந்திக்கும் வாய்ப்பு கூட இருந்ததில்லை.

   

இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்??? அவனை எப்படி எதிர்கொள்வது? என்ன பேசுவது???

   

அம்மாவிடம் இதை எல்லாம் கேட்க கீதாவிற்கு தயக்கமாக இருந்தது.

   

முதல் முறையாக, கூட பிறந்த அக்கா தங்கை இல்லையே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

   

இந்த குழப்பங்கள் போதாதென்று, எந்த சாரீ கட்டுவது என்று வேறு அவளுக்கு ஒரே குழப்பம்!

   

சமையலறையில் படு பிஸியாக இருந்த அம்மாவை தொல்லை செய்து அழைத்து வந்து ஒருவழியாக அன்று கட்டும் சாரீயை தேர்வு செய்தாள் கீதா!

   

ஆனால் உடனேயே எந்த ஹேர்ஸ்டைல் செய்வது என்று கேள்வி அவளுக்கு எழுந்தது!

   

இப்படி, கேள்வி மேல் கேள்விகளாக எழுந்தவற்றை சமாளித்து, அவள் ஒரு வழியாக ரெடியான போது வீட்டின் வெளியே கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

   

அவ்வளவு தான்!!! 

   

இது வரை அடித்த லப்-டப் ஸ்பீட் எல்லாம் ஜுஜுபி என்பது போல பத்து மடங்கு எகிறியது கீதாவின் இதய துடிப்பு...!

   

எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் ஒரு விதமான இன்பமான பரபரப்புடன் அவள் நிற்க, வெளியே சலசலப்புகளும், நல விசாரிப்புகளும் கேட்டன.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.