(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

அவர்களின் பேச்சில் இருந்து ஏதோ அவசர வேலை காரணமாக தியாகு அன்று வரவில்லை என்பது புரிந்தது.

   

ஒரு சில நிமிடங்கள் செல்ல, கீதா இருந்த அறைக்குள் வந்த அவளின் அம்மா,

   

“வா கீதா, உன்னை பார்க்க எல்லோரும் ஆர்வமா இருக்காங்க. மறக்காமல் வணக்கம் சொல்லு,” என்று அம்மா கொடுத்த லாஸ்ட் மினிட் அட்வைஸ்கள் கீதாவின் டென்ஷனை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க தான் செய்தது!

   

அவர்கள் இருவரும் நுழையவும், அந்த அறையில் இருந்த பேச்சு சத்தம் சுத்தமாக நின்று அமைதியானது!

   

கைகளை குவித்து கீதா வணக்கம் சொல்லும் போது, அவளின் கண்ணில் பட்டது அவளின் அம்மாவின் வயதை ஒட்டி இருந்த ஒரு பெண்மணி தான். விஜய்யின் சித்தி போலும் என கீதா யோசிக்கும் போதே,

   

என்ன இது? இப்படி ஓல்ட் ஃபேஷன்டா இருக்கீங்க??” என்று ஒரு குரல் கேட்டது!

   

ஏளனம் என்று சொல்ல முடியாது! எள்ளல்?? இருக்கலாம்!

   

மனதுக்குள் யோசித்துக் கொண்டே, கீதா நிமிர்ந்து, நேராக, குரல் வந்த பக்கம் பார்த்தாள்.

   

நீ எல்லாம் என் பக்கத்தில் கூட வர முடியாது என்று சொல்லாமல் சொல்லும் பாவனையுடன் ஒரு இளம் பெண் அங்கே அமர்ந்திருந்தாள்.

   

கீதா முதலில் பார்த்த பெண்மணி அந்த பெண்ணிடம் மெல்லியக் குரலில் எதுவோ சொல்லிவிட்டு, எழுந்து கீதாவின் அருகே வந்தாள்.

   

“அவ என் பொண்ணு தான், பேரு கிருத்திகா. அவ சொல்... அதெல்லாம் எதுக்கு? நான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.