இந்துவின் முகத்தைப் பார்த்த சஞ்சீவிற்கு, அவன் சொல்ல நினைத்த விஷயத்தை சொல்ல தயக்கமாக இருந்தது. கடந்த சில நாட்களில் இந்துவின் முகத்தில் இருந்த மலர்ச்சி மொத்தமாக மறைந்துப் போயிருப்பது அவனுக்கு புரிந்தது.
இந்துவிற்கும் சஞ்சீவிடம் சொல்ல வேண்டிய... இல்லை, இல்லை... கேட்க வேண்டிய விஷயம் ஒன்று இருந்தது! இருந்தாலும் அவன் என்ன சொல்கிறான் என்று கேட்ட பின் அதை சொல்வது என்று முடிவு செய்தவளாக,
"சொல்லுங்க... எதோ பேசனும்னு சொன்னீங்களே," என்றாள்.
எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் ஒலித்த அவளின் குரல், சஞ்சீவின் மனதில் இருந்த தடையை அகற்றியது! எனவே, அமைதியானக் குரலில்,
"எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லை. ஆனாலும் அம்மா கிட்ட நான் சொன்னதுப் போல, அவங்களுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் செய்துப்பேன். ஆனால், அந்தப் பொண்ணு நீயா இருந்தா, சில நிபந்தனைகள் இருக்கு," என்றான் சஞ்சீவ்.
அதை சொல்லும் போதே இந்துவின் முகத்தை கூர்மையாக பார்த்து, ஆராய்ந்த படியே தான் சொன்னான்.
ஆச்சர்யத்தின் அறிகுறியாக இந்துவின் கண்கள் கொஞ்சமாக விரிந்தன! மற்றப்படி பெரிதாக அவள் முகத்தில் மாற்றம் ஏற்படவில்லை. அவளே மேலே கேட்கட்டும் என்று அமைதியாக இருந்தான் சஞ்சீவ்.
சில வினாடிகள் மீண்டும் அங்கே அமைதி நிலவியது!
{/f90filter}
அவனின் எண்ணம் புரிந்தது போல், இந்து,
"என்ன கன்டிஷன்ஸ்?" என்றாள்.
"எல்லாம் உனக்கு நல்லா பரிச்சயமான கன்டிஷன்ஸ் தான். நீ இந்த பிஸ்னஸ் வுமன் எனும்