ஆமா இல்லைன்னு சொல்லு. எதுவா இருந்தாலும் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை," என்றான் சஞ்சீவ்!
கோபமாக உதிர்ந்த அவனின் வார்த்தைகளை கேட்டதும் தானாக இந்துவின் உள்ளும் கோபம் எழுந்தது! ஆனால் அதை உடனடியாக அடக்கினாள் இந்து! அவளும் இந்த நேரத்தில் கோபப்படுவதால் எந்த பயனும் இல்லை.
அவர்களுக்குள் சமீபத்தில் நடந்த சந்திப்புகள் சஞ்சீவுக்கு பிடித்த விதத்தில் இல்லை என்பது அவளுக்கு நினைவில் இருந்தது! அதற்கு அவள் தான் காரணம் என்பதும் அவளுக்கு தெரியும்! ஒவவொரு தடவையும் சஞ்சீவ் அவளிடம் அமைதியாக, பொறுமையாக பேச வேண்டும் என அவள் எதிர்பார்ப்பது சரியில்லை!
சஞ்சீவின் கோபத்திற்கான காரணம் புரிந்தவளாய், அவனிடம் பேசி சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்க முடிவு செய்தாள். அதனால் அவனை நேராகப் பார்த்து,
"ஏன்?????" எனக் கேட்டாள்.
🌼🌸❀✿🌷
வீட்டில் இருந்து கிளம்பியது முதலே சஞ்சீவின் மனதில் பலரகமான குழப்பங்கள் இருந்தது! காஞ்சனா சொன்ன ‘பெண்’ இந்து தான் என்று தெரிந்தப் போது கூட அவனுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியோ கோபமோ ஏற்பட்டு விடவில்லை! ஆனால், காஞ்சனா இந்துவிடம் தனியாக பேசியது பற்றி எல்லாம் சொன்னப் போது தான் அவனுள் புது கோபம் எரிமலையாக உழலத் தொடங்கியது! என்ன நடந்திருக்கும் என்பதை அப்போது தான் அவனால் ஊகிக்க முடிந்தது! அது எந்த விதத்திலுமே அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை!
எத்தனை முறை இந்துவிடம் கெஞ்சாத குறையாக கேட்டிருப்பான்! ஒருத் தடவைக் கூட அவள் அவனின் அம்மா தான் காரணம் என்று ‘ஹின்ட்’
{/f90filter} கூட கொடுக்காமல் பெரிய சின்சியர் சிகாமணியாக நடந்துக் கொண்டது அவனுக்கு எக்ஸ்ட்ராவாக எரிச்சலை சேர்த்தது!
அவள் எப்படி அவனை, அவனின் அன்பை விட வேறு விஷயம் பெரியது என்று