நினைக்கலாம்??
அவன் அவளிடம் இப்போது சொன்ன கன்டிஷன்ஸ் எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா எல்லாம் அவன் ப்ளான் செய்து சொன்னது இல்லை! ஆனால் காதல் கத்தரிக்காய் எல்லாம் அவன் தாண்டி வந்து விட்டிருந்ததால் (!!!!) அவனும் இந்துவின் ஸ்டைலிலேயே அவளை வருத்தப் படுத்த விரும்பினான்!
இந்த கண்டிஷன்களுக்கு இந்து கட்டாயம் சம்மதிக்க மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும்! அவன் விரும்பியதும் அதை தான்! ஆனால் கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவளை வருத்தப் பட வைக்க விரும்பினான்!
இப்படி எல்லாம் யோசித்து தன் கன்டிஷன்களை சொல்லி விட்டு காதுகளை கூர்மையாக்கி காத்திருந்தான்!
ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது!
இந்துவிடம் இருந்து கோபத்தையும், சீறும் வார்த்தைகளையும் எதிர்பார்த்திருந்தவன், அவளின் உணர்ச்சி துடைத்த அந்த ‘ஏன்’ எனும் சிறுக் கேள்வியை எதிர்பார்த்திருக்காதவனாக திகைத்துப் போனான். ஆனால் அவனும் அவளுக்கு சளைத்தவன் இல்லை என அவளுக்கு உணர்த்திவிட விரும்பியவனாக உடனேயே சுதாரித்துக் கொண்டு,
"என்ன???" என்று இந்துவைப் போலவே பதில் கேள்வி கேட்டான்!
"என்ன புதுசா இந்த கன்டிஷன்ஸ் எல்லாம்????"
"நடக்குற
{/f90filter}
து எல்லாமே புதுசா தானே இருக்கு?"
"ப்ச்! சஞ்சீவ், புரிஞ்சு பேசுங்க!"
"எதை புரிஞ்சுக்கனும்???? அதையும் நீங்களே சொல்லுங்க இந்து மேடம்!"