(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தினகரனோ அந்த பெண்ணையும் ரிஷியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு

   

”எனக்கு அப்படி தோணலை அண்ணாவோட முகத்தில பிரகாசமே தெரியலை இந்த பொண்ணை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்”

   

“அப்ப அவர் ரிஜக்ட் பண்ணிட்டா நான் இவளை பார்த்துக்கறேன்” என்றான் கருணாகரன்

   

“எதுக்கு”

   

“கல்யாணத்துக்குதான்”

   

“அவளை நீ கல்யாணம் பண்ணா உனக்குதான் கஷ்டம்”

   

“என்ன சொல்ற”

   

“ஆமாம் ஒரே பொண்ணு சொத்து மொத்தம் அவள் பேர்ல இருக்கு யார்கண்டா உன்னை வீட்டோட மாப்பிள்ளையா கூட மாத்திடுவாங்க” என்றான் தினகரன்

   

“அய்யோ இது வேறயா அப்ப நமக்கு வேணாம்பா நான் அடுத்த ஆளை பார்க்கறேன்”

   

“டேய் அண்ணா இந்த பொண்ணுங்களெல்லாம் உனக்காக வரலை ரிஷிஅண்ணாவுக்காக வர்றாங்க”

   

“அது தெரியும்டா அதுக்காக அண்ணா என்ன 3 பொண்ணுங்களையுமா கல்யாணம் செஞ்சிக்கப்போறாரு. யாரோ ஒருத்தரைதானே மீதி ரிஜக்ட் ஆன 2 பொண்ணுங்கள்ல எது பெஸ்டோ அதுல ஒண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்பு”

   

“சே இது தெரிஞ்சிருந்தா உனக்கும் சேர்த்து சுயம்வரம் நடத்தியிருக்கலாம்ல”

   

”முதல்ல அண்ணா கல்யாணம் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்” என சொல்லிவிட்டு 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.