(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

என தலையாட்டியவன் மணியை பார்த்தான் மணி 10 என காட்ட அவனுக்கு நந்தினியின் ஞாபகம் வந்தது. 

   

”மணி 10 ஆகுது முதல் பொண்ணே வந்துட்டா இன்னும் ஏன் இவள் வரலை. அந்த அர்ஜூன் அவளை வரவிடாம செய்றானா இல்லையே அப்படியிருக்காது. ஒருவேளை இவளுக்கே வர விருப்பமில்லையா தெரியலையே அம்மா தாயே வந்துடும்மா ப்ளீஸ்” என தனக்குள் நினைத்து கவலையடைந்தவாறே வாசலைப்பார்க்க அதை மற்றவர்கள் கண்டு சிரித்தனர்.

   

”என்னடா அடுத்த பொண்ணு எப்ப வருவாள்ன்னு ஆவலா பார்க்கறியா” என சித்தி கேட்க

   

”ஏன் சித்தி நீங்க வேற நான் அர்ஜூன்காக காத்திருக்கேன்” என சொல்ல அதற்கு கேசவமூர்த்தி

   

“அவன் எதுக்கு இப்ப ஒண்ணும் வேணாம் அவன் வந்தா நீ உடனே வெளியே போயிடுவ இன்னிக்கு சாயங்காலம் 6 மணி வரைக்கும் நீ எங்கயும் போக கூடாது புரியுதா”

   

“ம் புரியுது” என தலையை ஆட்டினான் ரிஷி.

   

ஆனால் தாத்தாவோ அவனின் இந்த டென்ஷனுக்கான காரணம் நந்தினி என தெரிந்துக்கொண்டார். அவர் மெதுவாக ரிஷிக்கு மட்டும் கேட்கும் படி

   

”ரிஷி”

   

“தாத்தா”

   

“உன் ஆளு கட்டாயமா வருமா”

   

“வரனும் எனக்கு நம்பிக்கையிருக்கு இந்த அர்ஜூன் சொதப்பாம இருந்தா சரி”

   

“ஏன் என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.