(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”பெரிய உலக அழகியை கூட்டிட்டு வந்த மாதிரி கெத்தை பாரு அவரை மாதிரியே ஒரு ஜெராக்ஸ் கிடைச்சதும் என்னை பலிகொடுக்க தயாராயிட்டாரு” என ரிஷி தன் மனதில் நினைத்துக்கொண்டே தாத்தாவிற்கும் வந்த பெண்ணிற்க்கும் நடுவே நடக்கும் பேச்சுவார்த்தையை கவனிக்கலானான்.

   

தாத்தா மெதுவாக அந்த பெண்ணிடம்

   

”என் பேரு செல்வகணபதி ”கணபதி ஆட்டோமொபைல்ஸ்” ஓனர்” என தன்னைப்பற்றி தானே அறிமுகம் செய்துக்கொண்டார். அதைக்கண்ட அவளும் அழகாக 

   

”என் பேரு சோனா ”சோனா ஆட்டோ மொபைல்ஸ்” ஓனர் மிஸ்டர் சிவசங்கரன் பொண்ணு. ஒரே வாரிசு மொத்த சொத்தும் என்மேலதான் இருக்கு”

   

என அவள் சொல்லியபின்

   

”உன் அப்பா வரலையாம்மா”

   

“தேவையில்லை. இது ஒரு சாதாரண பிசினஸ் டீலிங் போலதானே நான் எல்லா இடத்துக்கும் என் அப்பாவை கூட்டிட்டு போறதில்லை.”

   

“அதுக்கில்லை இங்க நீ தனியா 1 மாசம் தங்கியிருக்கனும் அதனால கேட்டேன்”

   

“தாராளமா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் பாரின்ல படிச்ச பொண்ணு அங்க எனக்காக தனியா ஒரு பங்களாவையே விலைக்கு வாங்கி தந்தாரு அப்பா அங்க நான் தனியாவே தங்கிதான் படிச்சேன். இந்த வீட்டையும் நான் ஒரு ஹாஸ்டலாவே நினைச்சிக்கிறேன் நோ ப்ராப்ளம்”

   

“உன்னோட லக்கேஜ்கள் எல்லாம்”

   

“அப்பா அப்புறமா அனுப்பி வைக்கிறேன்னு சொல்லியிருக்காரு மிஸ்டர் செல்வகணபதி”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.