(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

செய்ற சரி உன்னை விடு அந்த பொண்ணு எப்படி உன்னை நம்பி அந்த இடத்துக்கு வந்தா”

   

“நான் சொல்லி கூப்பிடலையே”

   

“அதான் நீ மட்டும் சொல்லியிருந்தா அவள் வந்திருக்கமாட்டாள்”

   

“தாத்தா ப்ளீஸ் நானே பயந்துக்கிட்டு இருக்கேன். இப்பவே ஒருத்தி வந்துட்டா இன்னும் அவளை காணலை பாருங்க”

   

“நீ பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு அவள் வரனும்னு எதிர்பார்க்கறியே அதுவே பெரிய தப்பு” என அவனிடம் கடிந்துக்கொண்டிருந்த அந்த வேளையில் வாசலில் அரவம் கேட்க அனைவரும் அமைதியாகி வாசலை பார்த்தார்கள்.

   

அங்கு ஒரு அழகான பெண் புடவையணிந்து அடக்கமாக அன்னநடை நடந்து ரிஷியின் தாய் பவித்ராவுடன் வந்து நின்றாள்.

   

தலைகுனிந்திருந்தாள். அவளின் அமைதியைக்கண்ட ரிஷிக்கு நந்தினியின் ஞாபகமே வந்தது. அவன் தாத்தாவை பார்த்தான்

   

”தாத்தா நந்தினி கூட இப்படித்தான் அடக்கமா இருப்பா”

   

“டேய் இப்ப வந்தவளைப்பத்தி பேசுடா வராதவளை பத்தி ஏன் பேசற”

   

“இவளை பத்தி பேச என்னயிருக்கு எப்படியும் அம்மாவை போலதான் இருப்பா பாட்டிக்கு அடுத்த அடிமை சிக்கிச்சி. அம்மாக்கும் பாட்டிக்கும் நடக்கற போர்ல அப்பா எப்படி இத்தனை வருஷமும் பலியானாரோ இனிமே நான் அவரை மாதிரியே பலியாகனும் அவ்ளோதானே” என அலுத்துக்கொண்டான் ரிஷி. அவனைப்பார்த்து முறைத்தவர் வந்த பெண்ணைப்பார்த்து சிரித்து

   

”வாம்மா வந்து உட்காரு” என சொல்ல அவளும் சோபாவில் அடக்கமாக அமர்ந்தாள். அவள் பக்கத்தில் பவித்ரா அமர்ந்தார். அவள் வந்த தகவலை அறிந்து சோனாவும் தன் அறையை 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.