விட்டு வெளியே ஹாலுக்கு வந்து அவளையும் அங்கு நடக்கப்போகும் பேச்சுவார்த்தையும் கவனிக்கலானாள்
தாத்தா அந்த பெண்ணிடம்
”உன் பேரு என்னம்மா” என கேட்க அவள் தயக்கத்துடன் வாயே திறக்கவில்லை. மிகவும் வெட்கப்பட்டாள். அதைப்பார்த்த ரிஷிக்கு அவளது செயல் செயற்கையாக தோன்ற தலையை திருப்பிக்கொண்டான். அவனது செயலைக்கண்டு தாத்தா அவனை அதட்டவும் மறுபடியும் வேறுவழியில்லாமல் வந்த பெண்ணை பார்க்கலானான்.
தாத்தா மறுபடியும் அவளிடம்
”தயங்காதம்மா நாங்கதான் இருக்கோம் பதில் சொல்லு” என கேட்க அவளும் மெல்ல வாய்திறந்து
”வந்தனா” என்றாள்
”நல்லது உன் அப்பா அம்மா ஊரு” என அவர் ஆரம்பிக்க பவித்ராவே
”மாமா நான்தான் சொன்னேனே எல்லா விவரமும் அப்புறம் என்ன மாமா இவளைப்பாருங்க அழகாயிருக்கா அடக்கமாயிருக்கா இவளையே பேசி முடிச்சிடலாம் மாமா” என அவசரப்பட்டார்
”இரும்மா பொறு இன்னும் 1 மாசம் இருக்கு அப்புறம் பார்க்கலாம் நீ அமைதியா இரு சரியா நான் அந்த பொண்ணுகிட்ட பேசிக்கறேன் கூட்டிட்டு வர்றதோட உன் வேலை முடிஞ்சது இனிமே என் வேலைதான் ஆரம்பமாகும் உன் சிபாரிசுங்கறதுக்காக என்னால பாவம் பார்க்க முடியாது சரியா” என சொல்ல அவரும் ஏமாற்றத்தில் சோர்ந்துபோய் தலையாட்டி மௌனமானார்.
தாத்தா அந்த பெண்ணிடம்
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories