ஏற்கனவே இங்கு வந்தனா இருக்கவே அவசரமாக அவளிடம் பவித்ரா
”அம்மாடி அங்க பாரு என் அத்தை வராங்க போம்மா போய் ஆசிர்வாதம் வாங்கிக்க” என அவளிடம் சொல்ல சட்டென எழுந்த வந்தனாவும் பாட்டியிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க அவரும் வேண்டா வெறுப்பாக அவளிடம் நடந்துக்கொண்டு சோபாவில் வந்து அமர அவருடன் வந்த பெண்ணும் அமர்ந்துக்கொண்டாள். அதைப்பார்த்த ரிஷிக்கு வெறுப்பே வர உடனே பக்கத்தில் இருந்த தாத்தாவிடம் குசுகுசு என பேச ஆரம்பித்தான்.
”தாத்தா பார்த்தீங்களா பாட்டி மாதிரியே ஒருத்தி என்னமா வந்து உட்கார்ந்திருக்கா கொஞ்சம் கூட மரியாதை தெரியலை உங்களையே முதல்ல மதிக்கலை பாருங்க இப்ப என்ன செய்யப்போறீங்க”
“நீ அமைதியா இருடா நான் பார்த்துக்கறேன்”
“பாட்டி முன்னாடி உங்க பப்பு வேகாது தாத்தா”
“டேய் இப்ப நான் பொண்ணு தேடறது என் பையனோட பையனுக்குதான் அவளோட பையனுக்கு கிடையாது. அவள் இஷ்டப்படி ஆடறதுக்கு. இந்த முறை அவளா நானான்னு ஒரு கை பார்க்கறேன்”
“அதுக்கு என் வாழ்க்கையிலதான் ரெண்டு பேரும் விளையாடனுமா”
“என்னடா செய்றது இத்தனை வருஷத்துல ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமான்னு நானும் பார்த்தேன் இப்பதான் சரியான வாய்ப்பு கிடைச்சிருக்கு பயன்படுத்திக்கப்போறேன்”
“கிழிச்சீங்க தாத்தா பாட்டியை போலவே அந்த பொண்ணும் உங்களை மதிக்காம உட்கார்ந்திருக்கு இதுல இந்த சினிமாத்தனமான வேலை எதையாவது செஞ்சி வைக்காதீங்க”
“டேய் நான் பார்த்துக்கறேன் நீ சொல்லு பொண்ணு ஓகே வா”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories