”உன்கிட்ட நான் கேட்கல நீ கூட்டிட்டு வந்த பொண்ணால பதில் சொல்ல முடியலைன்னா இப்பவே கூட்டிட்டு கிளம்பு போ” என அவர் கத்தவும் தாத்தாவின் இந்த சிறிய மாற்றத்தை ஏதோ பெரிய மாற்றமாக நினைத்து கோபமாக முறைத்தார் பாட்டி. அதைப்பற்றி கவலைப்படாமல் தாத்தா அந்த பெண்ணிடம்
”இங்க பாரும்மா நீதான் போட்டியில கலந்துக்க வந்திருக்க சரியா அதனால நீதான் பதில் சொல்லனும் பதில் சொல்ல விருப்பமில்லைன்னா தாராளமா கிளம்பலாம்” என சொல்ல வந்த பெண் பாட்டியை பார்க்க அவர் உடனே கண்களாலே ஏதோ கதை பேசிவிட்டு சாந்தப்படுத்தினார். பாட்டியின் தைரியத்தால் வந்தவளும்
”தாத்தா என் பேரு மிருதுளா”
“ம் நல்ல பேரு அப்பா அம்மா எல்லாம்“
“கிராமத்தில இருக்காங்க அப்பா விவசாயம் பண்றாரு போன முறை நீங்க கூட ஊருக்கு வந்தப்ப கவுன்சிலரா இருந்தாரு”
“ஓ கவுன்சிலர் பொன்னுசாமி பொண்ணா நீ”
“ஆமாம் தாத்தா”
“சரி சரி என்ன படிச்சிருக்க”
“படிப்பு எதுக்கு அதான் பணம் இருக்கே அதனால அப்பாவும் என்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைச்சி 10வதோட நிறுத்திட்டாரு.”
“அவர் நிறுத்தினா என்னம்மா நீயாவது மேல படிக்கலாம்ல”
“படிச்சி என்னத்த செய்யப்போறேன் தாத்தா” என்றாள் அலட்சியமாக
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories