“இல்லை மாமா நீங்க இப்ப சொன்னீங்களே அம்மா வீட்டுக்கு போக சொல்லி. நான் போறேன் மாமா ரொம்ப வருஷமாச்சி ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்” என சொல்ல கேசவமூர்த்தியும்
”அப்பா நானும் கூடவே போறேன் 1 மாசம்தானே ஜாலியா இருந்துட்டு வரேன்” என சொல்ல பாட்டி கத்தினார்
”ஏன் இந்த வீட்ல இருக்க உனக்கு ஜாலியாயில்லையா உன் மாமியார் வீட்லதான் நீ ஜாலியா இருப்பியா” என கத்த தாத்தா அதட்டினார்
”இனிமே உன் குரல் இந்த வீட்ல கேட்க கூடாது. இனிமே இங்க நான் வைச்சதுதான் சட்டம் என் உத்தரவுக்கு கீழ்படிந்துதான் இருக்கனும். போதும் அருந்ததி உன் காலம் முடிஞ்சிடுச்சி இது என் பேரன்களோட காலம் அவங்க விருப்பப்படி தான் இருக்கனும் பேசாம இரு இல்லைன்னா உன் அம்மாவீட்டுக்கு போயிடு” என சொல்ல மிருதுளா பாட்டியிடம் மெதுவாக
”பாட்டி பேசாம இருங்க 1 மாசம் தானே ரிஷி கைக்கு வரட்டும் அப்புறம் இந்த வீட்டை ஒரு வழி பண்ணலாம் இப்ப அமைதியா இருங்க” என அவள் பாட்டிக்கு உத்தரவிட அவரும் அமைதியானார். அந்த காட்சியைக்கண்ட தாத்தாவிற்கு சிரிப்பு வந்து சிரித்துவிட்டு
”உன்னை அடக்க ஒருத்தியை நீயே கூட்டிட்டு வந்திருக்க சபாஷ்” என சொல்லிவிட்டு எழுந்து சாப்பிட சென்றார். மற்ற பெண்களையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்தவர்களும் சாப்பிட அமர்ந்தனர்.
சாப்பிட்டு முடித்த கையோடு அவரவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று ஓய்வெடுக்க ரிஷி மட்டும் நந்தினிக்காக காத்திருந்தான். அவளின் வருகையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதைப்பார்த்த தாத்தா சிரித்துக்கொண்டே தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்கலானார்.
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories