“ஓ அவனோட கேர்ள் பிரண்டா மாமா”
“இல்லை”
“அப்புறம் யாரு மாமா”
“அவள் வந்தா நீயே தெரிஞ்சிக்குவ”
“எனக்கு புரியலை மாமா”
“ரிஷிக்கு இந்த 3 பொண்ணுங்களையும் பிடிக்கலை 4வதா வர்ற பொண்ணாவது தனக்கு பிடிக்குமான்னு நினைக்கிறான் போல இருக்கு”
“ஓ அப்படியா சரி பார்க்கலாம் ஆனா இப்பவே மணி 5.45 ஆயிடுச்சே மாமா”
“இரும்மா இன்னும் 15 நிமிஷம் இருக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம் முதல்ல ரிஷியை கூப்பிடு வாசல்ல நின்னு நின்னு பார்க்கறவங்க கூர்க்கான்னு நினைக்க போறாங்க” என சொல்ல அவரும் சிரித்துக்கொண்டே ரிஷியிடம் சென்றார்.
அவனோ உச்ச கட்ட டென்ஷனில் இருந்தான். அவன் முகத்தை பார்த்த சுசித்ராவுக்கு சிரிப்பே வர சிரித்துவிட்டாள். அவளின் சிரிப்பைக்கண்ட ரிஷி
”சித்தி” என செல்லமாக கோபப்பட
”என்ன கோபம்”
“எதுக்கு என்னைப்பார்த்து சிரிக்கறீங்க”
“டேய் பொண்ணு பார்க்க போறப்ப பொண்ணுங்கதான் இப்படி பயந்து போய் இருப்பாங்க மாப்பிள்ளை என்ன சொல்வான் சரிம்பானா இல்லையான்னு இங்க நீ பயப்படற”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories