(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”ஆமாம் அந்த பொண்ணும் வந்துட்டா மேற்கொண்டு பேசறேன் வரலைன்னாலும் சாயங்காலம் 6 மணிக்கு எல்லாரும் இங்க வந்துடுங்க நான் இந்த பொண்ணுங்ககிட்ட என்னோட விதிமுறைகள் சட்டதிட்டங்கள் எல்லாத்தையும் சொல்லனும்”

   

“அதுக்கு என்ன இப்பவே சொல்லுங்க” என பாட்டி சொல்ல அதற்கு கோபப்பட்ட தாத்தா

   

“இங்க பாரு நான் உன் பையன்களுக்கு பொண்ணு தேடல என் பேரனுக்கு பொண்ணு தேடறேன் அவன் வாழ்க்கையோட விளையாட இங்க யாருக்கும் அனுமதியில்லை. இந்த 1 மாசம் என் பேச்சை கேட்டு அமைதியா இருங்க இந்த மாதிரி கேள்வி கேட்க கூடாது. அந்த பொண்ணும் வரட்டும் ஒரேடியா எல்லாத்தையும் சொல்லிடறேன். யாருக்காவது இங்க இருக்க பிடிக்கலைன்னா தாராளமா இங்கிருந்து போயிடலாம் நான் தடுக்கவே மாட்டேன்” என சொல்ல பாட்டி

   

”என்னைப்போக சொல்றீங்களா” என கத்த அதற்கு

   

”இப்படியே கத்தினா அதையும் சொல்லிடுவேன் பேசாம இரு இந்த 1 மாசம் நீ என் பொண்டாட்டியா நடந்துக்க” என 

   

”முடியாதுன்னா என்ன செய்வீங்க”

   

“உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு போ” என விரட்டவும் அவரும்

   

”அம்மாவா என் அம்மா இறந்துட்டாங்களே நான் எங்க போவேன்”

   

“அப்ப பேசாம இங்கயே கிட வேற யாராவது அவங்க அம்மா வீட்டுக்கு போனும்னாலும் போகலாம்” என சொல்லவும் சுசித்ரா ஆசையாக வந்தாள்

   

”மாமா”

   

“உனக்கென்னம்மா நீயும் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கியா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.