நேரம் ஆக ஆக ரிஷிக்கு பயமும் பதட்டமும் ஒட்டிக்கொண்டது. அவனின் இதயம் வேகமாக துடித்துக்கொண்டிருந்த்து. மாலை 5 மணிக்கே வீட்டில் இருந்தவர்கள் ஒய்வெடுத்து முடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது ரிஷி வாசலில் நின்றுக்கொண்டு வெளியே பார்ப்பதைப் பார்த்து சந்தேகத்துடன் தங்கள் வேலைகளை பார்க்கலானார்கள். மணி ஐந்தரைக்கு தாத்தா பிரஷாக எழுந்து ரெடியாகி மறுபடியும் ஹாலுக்கு வர அவருக்கு சுசித்ரா காபி தரவும் அதை குடித்தவர் சுசித்ராவிடம்
”சுசித்ரா”
“மாமா”
“ரிஷி என்ன பண்றான் கதவை ஆராய்ச்சி பண்றானா என்ன”
“யாருக்காகவோ காத்திருக்கான் போல இருக்கு மாமா”
“சரிம்மா நீ உன் அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னது சரிதான் ஆனா உன்னை நம்பிதான் நான் இந்த போட்டிக்கே சரின்னு சொன்னேன்”
“என்ன மாமா சொல்றீங்க எனக்கு புரியலை”
“இந்த வீட்லயே எனக்காக பேசறது யாரு நீயும் ரிஷியும்தான் நீயும் போயிட்டா நான் ரொம்ப கஷ்டப்படுவேன். அதுவும் இல்லாம வெளியிலிருந்து பொண்ணுங்க வந்திருக்காங்க என்னால அவங்களோட ரொம்ப ஆழமா பழக முடியாது ஆனா உன்னால முடியும் அவங்களுக்குள்ள சண்டை சச்சரவு வராம நீ பார்த்துக்கனும் நீதான் ரொம்ப புத்திசாலி தராசு போல சரியான பேச்சு பேசுவ இந்த 1 மாசம் இங்க தங்கியிருந்து எனக்கு உதவி செய்வியா” என அவர் கெஞ்சி கேட்கவும் அவளும்
”என்ன மாமா இந்த வேலையை செய்ன்னா செஞ்சிட்டு போறேன் அத்தைக்காக எவ்ளவோ பிடிக்காத வேலையெல்லாம் செஞ்சேன் உங்களுக்காக பிடிச்ச வேலையை செய்ய மாட்டேனா”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories