“அட வாடா இங்க நிக்காத உன்னை கூர்க்கான்னு சொல்லி கிண்டல் செய்றாரு வா வா”
“ஆங் தாத்தாக்கு வந்த நேரத்தை பாருங்க சித்தி பாட்டியை அடக்கிட்ட சந்தோஷத்தில எல்லாரையும் கலாய்க்கறாராமா 1 மாசம் கழிஞ்சா திரும்பவும் பாட்டி விஸ்வரூபம் எடுத்து ஆடுவாங்க அப்ப நான் அவரை கலாய்க்கறேன்”
“அதைப்பத்தி அப்புறம் பார்க்கலாம் வா மணி 6 ஆயிடுச்சி” என அவர் சொல்ல
”என்னது ஆறா என்ன சித்தி சொல்றீங்க” என அவசரமாக கைக்கடிகாரத்தை பார்க்க இன்னும் ஆறாக 5 நிமிடங்களே உள்ள நிலையில் அவனது இதயமே நின்றுவிடும் போல உணர்ந்தவன் அவசரமாக வெளியே எட்டிப்பார்த்தான்
”டேய் யாரைடா பார்க்கற”
”4வது பொண்ணு வருமான்னு பார்க்கறேன் சித்தி”
“இதுக்கு மேல எங்க வரப்போறா நீ வா”
“சித்தி” என கத்தினான் ரிஷி
“அட வாடா இப்பவே வரலை இருக்கற 3 நிமிஷத்தில வந்துடப்போறாளா வாடா” என அழைத்துக்கொண்டு தாத்தாவிடம் கொண்டுவந்துவிட்டார் சுசித்ரா
அவனோ பதட்டமாக மணியை பார்த்துவிட்டு தாத்தாவிடம்
”தாத்தா இன்னும் 2 நிமிஷம்தான் இருக்கு வரலையே தாத்தா”
“சரி விடு”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories