“அப்படியா சரிம்மா என் குடும்பத்தை பத்தி நீ என்ன நினைக்கற”
“எங்களை மாதிரியே நீங்களும் பணக்காரங்க அவ்ளோதான்”
“பரவாயில்லயே இவ்ளோ நல்லா புரிஞ்சி வைச்சிருக்க சரிம்மா சந்தோஷம் ஆமா உன் வீட்ல இருந்து யாரும் வரலையா”
“எதுக்கு தாத்தா அவங்க வரனும்” என்றாள் அலட்சியமாக
”அப்படியில்லைமா இந்த வீட்ல நீ தனியா 1 மாசம் இருக்கனும் அதனாலதான் யாரும் வரலையா உன்னை கொண்டாந்து விட்டுட்டு போறதுக்கு”
“அவங்க வரேன்னுதான் சொன்னாங்க நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்”
“ஏன்மா”
“அதான் பாட்டி இருக்காங்களே அவங்க துணை போதும் வேஸ்ட்டா மத்தவங்க துணை எதுக்கு தாத்தா” என அவள் சொல்லவும் சொந்தங்களையும் பெற்றவர்களையும் துச்சமாக நினைப்பவளைப்பார்த்து முகத்தை சுளித்தார் தாத்தா அதைப்பார்த்த சுசித்ரா அவரின் எண்ணங்களை புரிந்துக்கொண்டு உடனே தாத்தாவிடம்
”மாமா இப்பவே டைம் ரொம்ப ஆயிடுச்சி எல்லாரும் சாப்பிடலாமே அதான் வர்றவங்க வந்துட்டாங்களே அப்புறம் என்ன” என கேட்க அதற்கு ரிஷி பாவமாக தாத்தாவைப்பார்க்க அவர் உடனே
”இல்லைம்மா இன்னும் ஒரு பொண்ணு வரனும் எப்ப வரும்னு தெரியலை ஒருவேளை சாயங்காலத்துக்குள்ள வந்துடும்”
“அப்ப 4 பொண்ணுங்களா” என வாய்பிளந்த பாட்டியைப்பார்த்து
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories