”அடுத்த அருந்ததி மாதிரியே இருக்கா. ஒருத்தியை கட்டியே நான் இன்னும் சுகப்படலை இதுல இன்னொருத்தியா முடியாதுன்னு சொன்னா விடமாட்டா சரி போட்டியில கலந்துக்கட்டும். இவளோட திறமை என்னன்னுதான் பார்க்கலாமே”
”நல்லா பாருங்க தாத்தா மத்த பொண்ணுங்களாவது ஜெராக்ஸ்ன்னு சொன்னேன் இதை நான் பாட்டியோட குளோனிங்க்னுதான் சொல்வேன்” என சொல்லிவிட்டு தன் போனை பார்த்தான்.
எந்த போனும் வரவில்லை மெசேஜ் கூட வரவில்லை. நேரம் 2 மணியாகியது. இன்னும் நந்தினியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவனின் கவலையைக்கண்ட பாட்டி
”என்னடா என்ன யோசிக்கற பயமாயிருக்கா பயப்படாதடா பார்த்தியா என்னை மாதிரியே ஒருத்தியை நான் தேடி கொண்டாந்திருக்கேன் எப்படி” என பெருமையாக சொல்ல அவனுக்கு கண்ணை கட்டி வராத போனை வந்ததாக நினைத்து எடுத்து பேசிக்கொண்டே
”ஹலோ சொல்லுங்க ஓ அப்படியா சரி சரி” என உடனே எழுந்து வேறுபக்கம் சென்றான். அவன் சென்றதும் அனைவருக்கும் ஏன் பாட்டிக்கும் புரிந்துவிட்டது. அவர் கோபமாக ரிஷியை பார்த்து
”டேய் ரிஷி வாடா இங்க”
“இருங்க பாட்டி போன் பேசிக்கிட்டு இருக்கேன்”
“ரொம்ப முக்கியம் வாடா இங்க” என பாட்டி கத்த அதற்கு அவருடன் வந்த பெண்ணும்
”வாங்க ரிஷி பாட்டி கூப்பிடறாங்கள்ல” என அதிகார தோரணையோடு அழைக்க அவன் கடுப்பாகி
”இதோ வரேன்டி உன்னை என்ன செய்றேன் பாரு” என கோபமாக நினைத்துக்கொண்டு புயல் போல வந்து தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்து அவளையே முறைத்தான் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்தவளைப்பார்த்து தாத்தா ரிஷியிடம்
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories