“நீங்க மட்டும் எதனால அன்னைக்கு திருவிழாக்கு போகலை?”
“ஹுஹ்! அதை ஏன் கேட்குறீங்க. இப்போ பார்த்தீங்களே அதே மாதிரி அன்னைக்கும் ஒரு சண்டை. வினாயக்கையும் ஸ்ரீனியையும் ஒன்னா வைக்க முடியுமா? ஸ்ரீனியை வேண்டாம்னு சொல்லிட்டு வினாயக் வினாயக்ன்னு சுத்துறவங்களை என்னன்னு சொல்றது? காதல் அறிவை மழுங்கடிக்கும்னு சொல்றது சரியா தான் இருக்கு!”
“அப்போ ப்ரியம்வதா வினாயக்கை லவ செய்றாங்களா?”
“பின்னே வேற எதுக்கு எப்போ பாரு அவனை மென்டல்ன்னு சொன்னா இப்படி கத்துறா?”
“அப்போ ப்ரியம்வதா வினாயக்குக்கு எதிரா எதுவும் செய்ய வாய்ப்பில்லைன்னு சொல்லுங்க.”
ஐஸ்வர்யா குரலின் ஒலியை குறைத்துக் கொண்டு பதில் சொன்னாள்.
“அப்படி சொல்ல முடியாது. லவ் செய்றது அவ தான். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்தாள்.
இங்கே பக்கத்திலேயே இருந்துக் கொண்டு தங்கைக்கும் வருங்கால மனைவிக்கும் நடுவே நடந்த சண்டையில் தலைப் போடாமல் இருந்திருக்கிறான்?! சக்தியால் ராகுலின் குணநலத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது. எதனால் ஐஸ்வர்யா ப்ரியம்வதா பற்றி பேசும் போது குரலை மெல்லியதாக்கினாள் என்பதும் புரிந்தது.
“ஐஸ்? கூப்பிட்டீயா?” ராகுல் கேள்வியுடன் அங்கே வந்து சேர்ந்தான்.