(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 12 - சசிரேகா

   

முகிலனை இளங்கோ என நினைத்து பயத்தில் மயங்கி சரிந்த தருண் இன்னும் விழிக்கவேயில்லை. மயங்கிய நிலையில் இருந்தவனைக் கண்டு ஆச்சர்யமாக பார்த்தாள் ஹரிணி. முகிலனோ அவனை சோதனையிட்டு

   

”மயக்கத்தில இருக்கான்”

   

”இந்தளவுக்கு பயம் இருக்கா இவனுக்கு, பரவாயில்லையே, இவன்தான் மத்தவங்களை பயமுறுத்துவான் முதல் முறையா இவனே பயந்து விழுந்திருக்கான்”

   

”சரி இப்ப இவனை என்ன செய்யலாம்“

   

”இவனை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன்”

   

”நானும் வரவா”

   

”வேணாம் இங்க ஒரு குடோன் ரூம் இருக்கு, அங்க நீங்க இருக்கலாம் தருண் இல்லாதப்ப நீங்க வெளிய வரலாம், இப்ப நான் இவனை கூட்டிட்டுப் போறேன் நீங்க போய் ஒளிஞ்சிக்குங்க” என சொல்ல முகிலன் அவசரமாக சென்று அறையில் ஒளிந்துக் கொண்டான்.

   

ஹரிணியோ அவசரமாக செக்யூரிட்டியை அழைத்து தருணை எப்படியோ தனது காரில் கிடத்தி ஆஸ்பிட்டலுக்குச் சென்று அவனை அட்மிட் செய்தாள். வைத்தியம் நடந்தது சில நிமிடங்களில் கண்கள் திறந்தான் தருண். அவன் முன் ஹரிணி நின்றாள் அவளைக் கண்டு அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது

   

”தருண் ஆர் யூ ஆல் ரைட்” என கவலையாக கேட்டாள் அவளின் இந்த மாற்றம் அவனை குழப்பியது

   

”ஹரிணி” என ஈனமாக அழைக்க

   

”சொல்லுங்க என்னாச்சி உடம்பு அசதியா இருக்கா, டாக்டரை கூப்பிடவா“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.