(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”சரி நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல ஹரிணி கிளம்பிச் சென்றாள்.

   

முகிலனோ தருணை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு குடோன் அறையில் படுக்க வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து சாப்பிட்டு அமர்ந்தான். ஏற்கனவே முகிலன் செட் செய்தது போல குடோன் அறையில் ஆங்காங்கு அலாரம் அடித்தது, அந்தச் சத்தம் கேட்டு தருணின் மயக்கம் தெளிந்தது. அவன் எழுந்து பார்த்தான், தான் இருக்கும் இடமே அவனுக்குத் தெரியவில்லை, பயந்தான் தட்டுத்தடுமாறி தடவியபடியே சுவரில் இருந்த சுவிட்சை தட்ட விளக்கு வெளிச்சம் சிவப்பு நிறமாக வந்தது, இதுவும் முகிலனின் ஏற்பாடுதான். அந்த சிவப்பு நிறத்தில் அந்த அறையில் எங்கு பார்த்தாலும் இளங்கோவின் போட்டோக்களே இருந்தது, ஏற்கனவே ஹரிணி இளங்கோவின் போட்டோக்களை வைத்திருந்தாள், இருந்தாலும் முகிலன் தன் பங்குக்கு இன்னும் சில போட்டோக்களை கொண்டு வந்து வைத்தான்.

   

அந்த போட்டோக்களை கண்டு திடுக்கிட்டான், அந்த அறைக்கதவை திறக்க முயன்றான் முடியவில்லை, கதவை உடைக்கும் அளவு முயற்சி செய்தும் முடியாமல் திணறினான், உடலில் பலமில்லை, பசி வேறு, தாகம் வேறு, தூக்கம் கூட அவனை ஆட்டி படைக்க வேறு வழியில்லாமல் அதே அறையில் படுத்தான், பார்க்கும் இடமெல்லாம் இளங்கோவின் போட்டோதான், அதை பார்க்க கூடாது என கண்கள் மூடினான். அந்த அறையின் சுவர் ஓரமாக ஒரு கேமரா வைத்திருந்தான் முகிலன், அதில் நடப்பதை தனது செல்போனில் பார்த்தபடி இருந்தவன் 

   

”இவனை தூங்க விடக்கூடாது” என நினைத்து கேமராவுடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கரில் இளங்கோ எப்போதே முகிலனிடம் பேசிய பேச்சுக்களை எடிட் செய்து தருணிடம் பேசுவது போல மாற்றி வைத்திருந்த அந்த ஆடியோவை ப்ளே செய்தான் அதுவும் பேசியது

   

”என்னை மறந்துட்டியே தருண், எப்படி உனக்கு மனசு வந்தது, என்னைத் தெரியலை, நான் செத்ததுக்கு நீதானே காரணம், உன்னை விடமாட்டேன், எப்பவும் உன்னை விட்டு நகரமாட்டேன், நீ எனக்கு வேணும், நீ எனக்கு வேணும்” என அந்த ஆடியோவை பலமுறை திருப்பி திருப்பி போட்டு வைத்தான். அதற்கே மாலை ஆகிவிட்டது. அதுவரை அந்த ஆடியோவை கேட்டு தருண் உட்சப்பட்ச பயத்தில் உறைந்திருந்தான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.