(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”யாரது” என தருண் கோபமாக கேட்க அந்த உருவம் மெதுவாக நடந்து தருணை நோக்கி வந்தபடியே

   

”ஹரிணி ஹரிணி” என சொல்லிக் கொண்டு வர அந்த உருவத்தைக் கண்டு தருணுக்கு பயமே வந்தது

   

”இளங்கோ இளங்கோ” என பயத்தில் பினாத்தியபடியே பின்னாடிச் செல்ல முகிலனோ இளங்கோவின் ஆவி போல நடிக்கலானான்

   

”ஹரிணி ஹரிணி” என சொல்லிக் கொண்டே முகிலன் வர தருணுக்கு பக்கென்றது.

   

ஹரிணியின் அறைகதவிடம் வந்த முகிலனோ

   

”ஹரிணி“ என அந்த கதவை தட்ட தருணோ 

   

”ஹரிணி கதவைத் திறக்காத” என காட்டுக்கத்தல் கத்தினான். அந்த சத்தம் கேட்டு திரும்பிய முகிலனோ கோபத்தில் தருணிடம் வேகமாக வந்து ஒரே எத்து எத்தினான், சுவர் ஓரமாக சுருண்டு விழுந்தான் தருண், அவன் சுதாரிப்பதற்குள் முகிலன் அவசரமாக ஓடிச் சென்று ஒளிந்துக் கொண்டான்.

   

தருணோ தனது வலியை பொறுத்துக் கொண்டு என்னவென பார்க்க அங்கு அந்த உருவம் இல்லை, ஹரிணியோ தனது அறைக்கதவை திறந்துவிட்டு மீண்டும் சென்று படுத்துவிட தருண் அவசர அவசரமாக ஹரிணியை காணச் சென்றான். ஹரிணி உறங்குவதைக் கண்டு நிம்மதியானான்

   

”அப்பாடா ஒரு நிமிஷம் உயிரே போச்சி சே இத்தனை நாள் இல்லாம இப்ப ஏன் நமக்கு இந்த கற்பனை வரனும் இது கற்பனைதானா ஆனா, வயிறு வலிக்குதே நல்ல அடி இடி மாதிரி விழுந்தது அப்படின்னா நாம பார்த்தது இளங்கோவோட ஆவியா இருக்குமா” என நினைத்து கதிகலங்கிப் போனான் தருண்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.