(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

கூடாது, அன்னிக்கே அவனை போலீஸ்ல பிடிச்சி கொடுத்திருக்கனும், எவ்ளோ தைரியம் இருந்தா நீங்க இருக்கறப்ப என்னை தேடி வந்திருப்பான், அவன்தான் இந்த கதவையும் உடைச்சிருப்பான் ராஸ்கல், அடுத்த முறை அவன் என் கண்ல பட்டா நான் சும்மாவே விடமாட்டேன்” என கோபத்தில் பொங்க தருணுக்கு நிம்மதியாகிப் போனது 

   

சோபாவில் சென்று அமர்ந்தான், அவனுக்காக ஜூஸ் கொண்டு வந்து தந்தாள் ஹரிணி

   

”சாப்பிடாம இருக்கீங்க இந்த ஜூஸ் குடிங்க எனிர்ஜி வரட்டும்” என சொல்ல அவனும் சரியென ஜூஸ் குடித்தான். 

   

”தருண் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு மறுபடியும் அவன் வரமாட்டான்ல” என அச்சத்துடன் கேட்க அதற்கு தருணோ

   

”வரமாட்டான் ஹரிணி, அவனை நான் அடிச்சி விரட்டிட்டேன், அந்த சண்டையில நான் மயங்கியிருப்பேன், என்னை மீறி அவனால உன் நிழலை கூட தொட முடியாது பயப்படாத” என சொல்ல அவளோ அவனின் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவனின் தோளில் தலை சாய்ந்துக் கொண்டாள். அவனோ அவளின் தலைமுடியை வருடிவிடலானான், அதில் அவள் சுகமாக உறங்கிப் போவது போல நடித்தாள், அவள் உறங்கிவிட்டாள் என நம்பி அவளை தூக்கிக் கொண்டு சென்று படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட அந்நேரம் டங் என ஒரு சத்தம் கேட்டது, அதில் அவன் திடுக்கிட்டான், என்னவென பார்க்க எண்ணி அந்த அறையை விட்டு வெளியேறினான்.

   

சத்தம் வந்த திசையை பார்க்க ஹரிணியோ சத்தம் எழுப்பாமல் நிதானமாக எழுந்து சென்று தனது அறைக்கதவை படார் என சத்தமாக சாத்தினாள். அந்தச் சத்தம் கேட்டு அதிர்ந்தான் தருண்

   

”ஹரிணி ஹரிணி” என அழைத்தபடி அந்த அறைக்கதவிடம் வந்த நேரம்

   

”ஹரிணி ஹரிணி” என ஒரு ஆண் குரல் கேட்கவும் தருணுக்கு திக்கென்றது. யார் என திரும்பிப் பார்த்தான், தொலைவில் ஒரு உருவம் தெரிந்தது

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.