(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

வைச்சோம் இப்ப எப்படி திறக்கலை” என அதனுடன் சண்டையிட அவனுக்கு பின்னால் வெகு அருகில் நின்ற முகிலன் ஊப்ப் என ஊதினான், அந்த காற்று பட்டு தருணின் உடல் அதிர்ந்தது பின்னால் திரும்பி பார்க்கவே பயந்தான் ஆயினும் அச்சத்துடன் திரும்பி பார்க்க அவனை ஒட்டிக் கொண்டு நின்றான் முகிலன் அவ்வளவு அருகில் அந்த உருவத்தைக் கண்டதும் ஆஆஆ என அலறி பின்னாடி சென்று கதவில் தலை இடித்துக் கொண்டு தரையில் விழுந்தான் மயங்கிப் போனான்.

   

முகிலனோ அவனை பரிசோதித்துவிட்டு ஹரிணிக்கு போன் செய்தான். அதுவரை ஹரிணி வீட்டிற்கு வெளியேதான் இருந்தாள், கதவை அவள்தான் வெளியில் இருந்து பூட்டியிருந்தாள். முகிலன் சொன்னதும் வீட்டை திறந்தாள், மயங்கிக்கிடந்த தருணை கண்டு இளப்பமாகச் சிரித்தாள் முகிலனோ

   

”அடுத்து என்ன”

   

”இவனை நிம்மதியாவே இருக்க விடக்கூடாது முகிலன், இவன் சாப்பிடக் கூடாது, தூங்க கூடாது, எந்நேரமும் பயந்துக்கிட்டே இருக்கனும், ஒரு 3 நாள் இப்படியிருந்தாலே போதும் தூங்காம இருந்தா மூளை கலங்கி தப்பான முடிவு எடுப்பான், 3 நாள் நீ இப்படி நடிச்சாலே போதும் முகிலன்“

   

”எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை இவன் அதிர்ச்சியில செத்துட்டான்னா பழி நம்ம மேல விழுமே”

   

”யாரு இவனா சாவான், மத்தவங்களை சாகடிப்பான் நீ பயப்படாத முகிலன்”

   

”சரி இவனை நான் பார்த்துக்கறேன், நீ போ இங்க இருக்காத” என முகிலன் சொல்லவும் ஹரிணியோ

   

”எந்தளவுக்கு பயமுறத்த முடியுமோ அந்தளவுக்கு பயமுறுத்து, அவனை யோசிக்க விடாத, தூங்கவிடாத, சாப்பிட விடாத, பட்டினி கிடந்து தூங்காம இருந்தா சீக்கிரமாவே இவன் புத்தி பேதலிச்சிடும்“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.