”ஒண்ணுமில்லை அதான் நான் வந்துட்டேன்ல வாங்க” என அவனை அழைத்துக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தாள்.
”நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் டின்னர் ரெடி பண்ணிட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அசதியில் தருண் உறங்கிப் போனான்.
10 நிமிடம் ஆயிருக்காது, மீண்டும் அலாரம் சத்தம் பட்டென கண்விழித்துப் பார்த்தான் அதே குடோன் அறை, அலாரம் அடித்து முடித்ததும் மீண்டும் இளங்கோ பேசிய ஆடியோ ஒலித்தது அவன் பயந்தேப் போனான்
”ஹரிணி ஹரிணி” என அலறினான் கதவை திறக்க முயன்றான் முடியவில்லை. அந்தப் பேச்சு அவனை ஒருவழியாக்கியது.
மறுநாள் பொழுது விடிந்தது. ஹரிணி முகிலனிடம் வந்தாள்
”தருணோட நிலைமை என்ன”
”பயத்தில இருக்கான் பாரு” என சொல்ல அவளும் அவனது செல்போனை பார்த்தாள் சுவரில் பல்லி போல ஒட்டியபடி இருந்தான்
”இவனுக்கு இது தேவைதான்“
”அடுத்து என்ன செய்யலாம்”
”இதையே கன்டினியூ பண்ணு முகிலன்”
”இப்படியே போனா, இவன் செத்துடப்போறான்”
”இவனுக்கு சாவு வராது“