”பைத்தியமாயிடப் போறான்”
”நல்லது இவன் செய்த தப்புக்கு பைத்தியம் ஆகட்டும், அவனை கூட்டிட்டுப் போய் பைத்தியக்கார ஆஸ்பிட்டல்ல சேர்த்துடறேன்”
”ஓகே இப்பவே ஒரு நாள் ஆயிடுச்சி இன்னும் 2 நாள்தான் பாக்கி, 3 நாள் முடிவில தருணோட நிலைமை என்னன்னு பார்க்கலாம் சரியா”
”ஓகே” என ஹரிணி சொல்ல முகிலன் தனது வேலையைத் தொடங்கினான்
தருணால் அந்த அறையை விட்டு வெளியேற இயலவில்லை, 2 நாட்களும் இதே போல முகிலன் தருணை பயமுறுத்திக் கொண்டே இருந்தான், 3வது நாள் முடிவில் தருணிடம் ஒரு மாற்றம் தெரிந்தது, விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான், அதைக் கண்டு பயந்த முகிலனோ ஹரிணியிடம் தகவல் அளிக்க, அவளும் வந்து பார்த்தாள்
”இப்ப என்ன செய்றது”
”போதும் நீங்க கிளம்பலாம் முகிலன், இனி தருணை நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல முகிலனும்
”சரி நான் கிளம்பறேன் ஆனா ஜாக்கிரதை அவனால உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துடப்போகுது, அப்படி ஏதும் நடந்தா உடனே எனக்கு தகவல் சொல்லிடுங்க, நான் வந்து உங்களை காப்பாத்தறேன்”
”ஓகே தருணை நான் குடோன் ரூமிலிருந்து வெளிய கூட்டிட்டு வந்துடறேன், நீங்க அந்த ரூம்ல செட் பண்ண எல்லாத்தையும் எடுத்துடுங்க, தருணுக்கு சந்தேகம் வரக்கூடாது”
”ஓகே” என சொல்ல ஹரிணி குடோன் அறையை திறந்துக் கொண்டு சென்றாள். தருண் அதே நிலையில் இருக்க அவனை உலுக்கி எழுப்பிப் பார்த்தாள், அவன் பயத்தில் கிடந்தான், அவனை