(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

மறுநாள் காலை வரை தருணுக்கு உறக்கமே இல்லை. ஹரிணி உற்சாகமாக இருந்தாள்

   

”தருண் நான் ஆபிசுக்கு கிளம்பறேன் பை” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட தருணோ உறங்குவதற்காக தன் அறைக்குச் சென்றான். படுக்கையில் படுத்தான் கண்கள் மூடினான், உறக்கம் உடனே வந்தது ஒரு 10 நிமிடம் கூட ஆயிருக்காது, அவனை யாரோ உலுக்கி எழுப்புவது போன்ற உணர்வு அதில் கட்டிலை விட்டு தரையில் விழுந்து எழுந்து பார்த்தான் ஒருவரும் இல்லை

   

”சே தூக்கத்தில உருண்டு விழுந்துட்டேன் போல ஷ்ஷ்” என சொல்லிக் கொண்டே படுக்கையில் படுத்தான்.

   

5 நிமிடம் ஆயிருக்காது அவனின் கன்னத்தில் பளார் என்ற ஒரு அடி விழுந்தது, அதில் அதிர்ந்து எழுந்து பார்த்தான் ஒருவரும் இல்லை ஆனால், கன்னம் வலி எடுக்க கண்ணாடியில் தன்னை பார்த்தான் கன்னத்தில் 3 விரல் பதிந்திருந்தது

   

”என்ன நடக்குது இங்க” என நினைத்தபடியே அக்கம் பக்கம் பார்த்துவிட்டு 

   

”நாம ஹால்ல படுத்து தூங்கலாம்” என நினைத்தபடியே ஹாலுக்கு வந்து சோபாவில் படுத்தான். உறங்கினான் கால் மணி நேரம் கழித்து அவனது காலை யாரோ இழுப்பது போன்ற உணர்வு அவனோ தூக்கத்தில்

   

”விடு” என சொல்லிக் கொண்டே புரள சட்டென அவனது காலை தரதரவென இழுத்து விட அவன் தரையில் பொத்தென விழுந்தான் அவ்வளவுதான் பயத்தில் வெலவெலத்துப் போனான்

   

”யாரு யாரு” என அந்த வீட்டையே சுற்றி முற்றிப் பார்த்தான், இவ்வனைத்தும் செய்தது முகிலன்தான், தருணை நன்றாக பயமுறுத்திவிட்டான் அவன் தூங்கவே கூடாது என நினைத்து இவ்வளவும் செய்தான், தருணோ பயந்தபடியே வீட்டை விட்டு வெளியேற எண்ணி கதவை திறக்க பார்க்க அது திறக்கவில்லை. 

   

”என்னது கதவு திறக்க மாட்டேங்குது ஹரிணி, போன பின்னாடி நாமதானே கதவை சாத்தி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.