மாலை நேரம் ஹரிணி வந்ததும் முகிலன் நடந்ததைச் சொல்ல அவளோ
”இனி நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல முகிலன் அந்த ஆடியோவை சட்டென நிப்பாட்டிவிட்டு ஒளிந்துக் கொண்டான்.
அந்தச் சத்தம் நின்றதும் தருண் அச்சத்துடன் அக்கம் பக்கம் பார்த்தான், பயத்தில் வேர்த்து வேர்த்து அவனது உடைகள் நனைந்துவிட்டது, கண்கள் சுருங்கி, உடல் நடுங்கி, நோயாளி போல இருந்தான்.
ஹரிணியோ தருணை தேடுவது போல பாசாங்கு செய்துவிட்டு அந்த குடோன் அறையை திறக்க அந்தச் சத்தம் கேட்டதும் தருண் அடித்துபிடித்து வெளியே ஓடிவந்து நின்றான், அவனை அப்படி கண்டதும் ஹரிணிக்கே பயம் வந்தது
”தருண் என்னாச்சி” என கேட்க அவனோ ஹரிணியை பேய் போல பார்த்து
”என்னை விட்டுடு, என்னை விட்டுடு” என அலறினான் ஹரிணி அவனை உலுக்கினாள்
”தருண் என்னாச்சி, ஏன் இப்படி நடந்துக்கறீங்க” என கத்த அதில் அவன் சற்று தெளிந்தான்
”ஹரிணி நீதானா”
”நானேதான் ஆமா உங்களை எங்க எல்லாம் தேடறது, எதுக்கு இந்த ரூம்ல இருக்கீங்க, பாருங்க எப்படி வேர்த்து கொட்டியிருக்கு என்னாச்சி தருண்” என கேட்க அவனோ விசயம் சொல்லாமல் அவளிடம்
”அது பவானியிருக்காள்ல, அவள் ஆவியா என் முன்னாடி வந்தா“
”பவானியா எதுக்கு”
”தெரியலை எனக்கு பயமாயிருக்கு ஹரிணி”