(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

கைதாங்கலாக அழைத்துக் கொண்டு தனது அறைக்கு வந்து தனது படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவனின் முகத்தில் தண்ணீரை பட்டென ஊற்றினாள். அதில் சுயநினைவு வந்த தருணோ, ஹரிணியை கண்டதும் திடுக்கிட்டான், கண்கள் மூடி திறந்தான், ஹரிணியே இருந்தாள் மறுபடியும் மறுபடியும் கண்கள் மூடி திறந்துப் பார்த்தான், ஹரிணியே இருக்கவும் தருண் சின்ன பிள்ளை போல கதறி கதறி அழுதபடியே 

   

”ஹரிணி” என அழைக்க அவளோ

   

”என்னாச்சி தருண் ஏன் இப்படியிருக்கீங்க”

   

என கேட்க அவனோ நடந்த விசயத்தால் மூளை கலங்கியிருந்தான், அதனால் அவள் கேட்டதும் உளறலானான்

   

”எனக்கு இளங்கோ தெரியறான் ஹரிணி”

   

”உளறாதீங்க இளங்கோ இறந்துட்டாரு”

   

”இல்லை ஹரிணி அவனை நான் பார்த்தேன்”

   

”இளங்கோ உயிரோட இல்லை தருண், இது உங்களோட பிரமை”

   

”இல்லை அவன் ஆவி என்னை பயமுறுத்துது”

   

”இளங்கோவோட ஆவியா என்ன விளையாடறீங்களா”

   

”விளையாடலை உண்மை அவனை நான் கொன்னதுக்காக, என்னை பழிவாங்க ஆவியா அலையறான், அவன் என்னை கொன்னுடுவான், என்னைக் காப்பாத்து ஹரிணி”

   

”உளறாதீங்க தருண் இளங்கோவை நீங்க கொன்னீங்களா, நம்ப முடியலை“

   

”உண்மைதான் இளங்கோ எனக்கு போட்டியா வந்தான், அவன் உயிரோட இருந்தா என்னால 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.