(Reading time: 16 - 32 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”அப்படியா“

   

”ஆமாம் தருண் நல்லா தூங்கிகிட்டு இருந்தேன், பாத்ரூம் வர்ற மாதிரியிருந்தது சரின்னு எழுந்து போய் வந்துப் பார்த்தா நீங்க இல்லை உங்களை தேடிக்கிட்டு நான் ரூமைவிட்டு வெளிய வந்தா வீட்டு வாசல்ல அவன் நிக்கறான், அவனைப் பார்த்ததும் என் உடம்பே அதிர்ந்துடுச்சி, பயத்துல பதட்டத்துல நீங்க வெளிய இருக்கறதை மறந்துட்டு சட்டுன்னு கதவை சாத்தி தாள்பாள் போட்டுட்டு ஓடிப் போய் என் ரூம் கதவு சாத்திட்டேன். அப்புறம் என்னாச்சின்னு தெரியலை தலை கிறுகிறுன்னு சுத்தி மயக்கம் வர்ற மாதிரி ஆகி அப்படியே விழுந்துட்டேன் அதுக்கு அப்புறம் என்னாச்சின்னு தெரியலை, மறுபடியும் நான் கண்விழிச்சிப் பார்த்தப்ப யாரும் இல்லை மூடின கதவு மூடியபடி இருந்தது, மணியை பார்த்து ஷாக்காயிட்டேன் 12 மணி நேரம் தூங்கியிருக்கேன், அப்புறம் உங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து கதவை திறந்து வந்து பார்த்தா, நீங்க மயங்கி கிடந்தீங்க எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை அவசரமா செக்யூரிட்டியை வரவழச்சி உங்களை கார்ல ஏத்திக்கிட்டு இங்க வந்து சேர்த்தேன்

   

ஒரே நாள்ல எவ்ளோ டென்ஷன் தெரியுமா எனக்கு, இப்ப கூட கைகால் எல்லாம் வெடவெடன்னு நடுங்குது தருண், எப்படியோ நீங்க கண் விழிச்சிட்டீங்க இது போதும் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு, கடவுளுக்குதான் கோடான கோடி நன்றி சொல்லனும், நீங்க கண்விழிச்சதும் சொல்லச் சொன்னாங்க நான் போய் டாக்டரை கூட்டிட்டு வந்துடறேன் தருண்” என சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல தருணுக்கு நிம்மதியாகிப் போனது

   

”ஆக நானும் அவனும் பேசின எதுவும் ஹரிணிக்கு தெரியலை, அவனைப் பார்த்ததும் கதவை சாத்தியிருக்கா, நான்தான் தப்பா நினைச்சிட்டேன் பரவாயில்லை எனக்கு நல்லதாவே எல்லா விசயமும் நடக்குது, ஹரிணி என்னை தப்பா நினைக்கலை, இப்பவும் என் மேல அக்கறையா இருக்கா, அவனும் இனி என் பக்கம் கூட வரமாட்டான் நிம்மதியா போச்சி ஆனா, அந்த இளங்கோ அவனை நான் பார்த்தேனே, ஒருவேளை அது என்னோட பிரமையா இருக்குமோ, இருக்கலாம் நாம போட்ட ப்ளான் சொதப்பிடுச்சி, இனி ஹரிணி குழந்தை கேட்கறப்ப என்ன செய்றது சரி அதுக்குள்ள வேற ப்ளான் யோசிச்சி வைக்கலாம், எந்த காரணத்தாலும் நாம ஹரிணியை விட்டுடக்கூடாது அது ரொம்ப முக்கியம்” என நினைத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.