பிரிவிலேயே என் மனசை நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்."
"அதனால் ஒரு பிரோயோஜனமும் இல்லை இந்து! நான் உன்னை விட்டு ரொம்ப தள்ளிப் போயிட்டேன்."
"சஞ்சீவ்!"
அவன் ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
இந்துவின் மனதில் ஒரே நேரத்தில் பல எண்ணங்கள் அலை மோதின!
ஆனால், இப்படி குழம்பிக் கொண்டே இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது அவளின் கூர்மையான அறிவுக்கு புரிந்தது! அதனால் தன் மனதில் இருந்த கேள்விகளை தற்போதைக்கு மூட்டை கட்டி வைக்க முடிவு செய்தாள்.
முதலில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். கேள்விகளை பிறகு கேட்டு தெளிந்துக் கொள்ளலாம்!
அந்த முடிவுக்கு வந்ததும் அவளின் மனம் ஓரளவிற்கு தெளிவாக சிந்திக்க தொடங்கியது!
சஞ்சீவ் சொன்ன நிபந்தனைகளை யோசித்தாள். முதல் நிபந்தனையில் அவளுக்கு எந்த பெரிய பிரச்சனையும் இல்லை! அவளே ஆஃபீஸில் இருந்து ப்ரேக் எடுக்க தான் நினைத்திருந்தாள்! அது மட்டுமில்லாமல் இது கீதாவிற்கு உதவக் கூடியதும் கூட! அவள் வீட்டை கவனித்துக் கொண்டால், கீதா அவள் முன்பு ஆசைப்பட்டது போல பிஸ்னஸ் பற்றி யோசிக்கலாம்! வீணாவும் கீதாவும் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் புதிய கம்பெனி பேச்சளவில் மட்டும் இருக்காமல், நிஜமாகவே நடைமுறைப் படுத்தப் படலாம்! கீதாவே அந்த புதிய நிறுவனத்தை நிர்வகிக்கலாம்!
{/f90filter}
முதல் கண்டிஷன் பற்றிய கவலை கரைந்துப் போகவும், அவளின் மனம் கொஞ்சம் அமைதியானது!
ஆனால், இரண்டாவது நிபந்தனையை நினைக்கும் போதே இந்துவிற்கு வலித்தது! அம்மாவுடன்