"சினிமால கதைல வர மாதிரி கொஞ்ச நாள்ல எல்லாம் மாறிடும், நான் மாறிடுவேன்னு எல்லாம் கனவு காணாதே," என்றான் எரிச்சலுடன்!
அவன் சொன்னது புரிந்ததோ இல்லையோ, அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடி, வாய் திறந்து எதுவும் சொல்லாது சரி என தலை அசைத்தாள் இந்து!
அதுவும் கூட சஞ்சீவின் கடுப்பை அதிகமாக்க தான் செய்தது!
இந்துவின் பொறுமையின் அடித்தளத்தை அறிந்துக் கொள்ள விரும்புவனைப் போல, "இனிமேல் என்னை சஞ்சீவ்னு பேர் எல்லாம் சொல்லி கூப்பிட கூடாது," என்றான் கறாராக!
ஹுஹும்!!! இதற்கும் இந்துவிடம் இருந்து கோபமான ரியாக்ஷன் ஒன்றும் வரவில்லை!
மாறாக, சஞ்சீவை ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்ஸ்டா’வில் இருக்கும் ‘ஃபெயித்ஃபுல் ஃபாலோவர்’ போல மீண்டும் தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் இந்து.
என்ன இவள்! என்ன சொன்னாலும் சரி என்று தலை ஆட்டுவாள் போல இருக்கிறதே, என தனக்குள் எரிச்சல் பட்டவன்,
"இன்னும் ஒன்னு! நம்ம ரெண்டுப் பேருக்கும் கல்யாணம் நடந்தாலும் நீயும் நானும் வெளி உலகத்துக்கு மட்டும் தான் கணவன் மனைவி. நமக்குள்ளே வேற எதுவும் இல்லை. நான் சொல்றது உனக்கு புரியுதா??" என்றான் குரலை உயர்த்தி!
இந்து இப்போது அவனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள்! ஆனால், இப்போதும் சரி என்ற அர்த்தத்திலேயே மீண்டும் தலையை ஆட்டினாள்!
சஞ்சீவிற்கு அவளின் ப
{/f90filter}
ார்வையில் வந்த மாற்றத்திற்கான பொருள் விளங்கவில்லை!
அவனுக்கு புரியாததற்கும் கூட இந்து தான் காரணம் என்பதுப் போல அவள் மீதிருந்த அவனின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது!