(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

பேசாமல் அவளால் இருக்கவே முடியாதே! எப்போதுமே அவள் அம்மாவுடன் ரொம்ப க்ளோஸ்!!!! ஆனால், சஞ்சீவ் இல்லாத வாழ்க்கையும் அவளுக்கு கஷ்டமாக தான் இருக்கும்! இரண்டு துன்பங்களில் எது சிறந்தது என்று தேர்வு செய்வது எப்படி??? 

   

அம்மாவின் உடல்நலம் பற்றிய எண்ணம் தோன்றவும், அது இந்துவை யோசிக்க வைத்தது!

    

கல்யாணம் செய்துக் கொள்வது தான் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் என்றெல்லாம் இந்துவிற்கு தோன்றவில்லை! ஆனால், இந்த திருமண பேச்சும் மீண்டும் நின்று போனால் அதை அவளின் அம்மாவால் தாங்க முடியுமா???? ஏற்கனவே அதை பற்றி தான் அம்மாவிற்கு கவலை! சஞ்சீவையும் அம்மாவிற்கு பிடிக்கும்! யோசனையுடன் எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்தாள்!

   

சஞ்சீவ் முகத்தை திருப்பி வைத்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்! பால்கனியில் வீசிய மெல்லிய காற்று அவனின் தலைமுடியை சிலுசிலுத்துக் கொண்டிருந்தது! 

   

இந்துவின் மனதில் இருந்த குழப்பங்களையும் மீறி மெல்லிய இதம் பரவியது!

   

சஞ்சீவை போல அவளின் மனதை கவர்ந்த ஆண்மகன் ஒருவனுமே இல்லை! சஞ்சீவ் அவள் மீது காட்டிய அன்பு, அதை செயல்களில் அவன் வெளிப்படுத்திய பாங்கு...

   

சட்டென்று ஒரு முடிவிற்கு வந்தாள் இந்து!

   

சஞ்சீவின் கோபத்திற்கு காரணம் அவள் தான்! அதை சரி செய்ய வேண்டியவளும் அவள் தான்! 

   

இது மாதிரியான கண்டிஷன் திருமணம் எனும் பெரிய கமிட்மென்ட்’டில் ரிஸ்க் அதிகம் தான்! ஆனால், அதை சஞ்சீவிற்காக செய்வதில் அவளுக்கு தயக்கம் எதுவுமில்லை! அவ

{/f90filter}ன் அவள் மீது இருக்கும் அன்பை பல விதங்களில் முன்பே வெளிப்படுத்தி விட்டான்! இப்போதைய அவனின் மெகா ஊடலை சரி செய்து மீண்டும் அவனை பழைய அவளுடைய அன்பு சஞ்சீவாக மாற்றுவது அவள் செய்ய வேண்டியது!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.