“ப்ச்... இல்லை...”
“அப்புறம் ஏன் என் செல்லம் இப்படி அமைதியா இருக்கா?? ஹ்ம்ம்... வேற என்ன?”
கீதா தியாகு சொன்னதை விஜயிடம் சொல்வதா வேண்டாமா என்று மனதினுள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
“ஏன் செல்ஸ் நேத்து பிரின்சஸ் வந்த அதே டைம்ல தியாகுவும் வந்திருந்தானாமே??”
அவள் சொல்ல தயங்கிக் கொண்டிருந்த விஷயத்திற்கு தொடர்பானதாக விஜயே பேச, கீதா அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்!
“ஆமாம் அண்ணாவும் வந்திருந்தான். அது உங்களுக்கு எப்படி தெரியும்?”
“பிரின்சஸ் சொன்னா! நீ என்ன நினைக்குற கீத்ஸ்?”
“எதைப் பத்தி?”
“யூ நோ... தியாகு – பிரின்சஸ்... சம்திங் சம்திங்!”
“என்ன பேசுறீங்க நீங்க?”
“அவங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடியா இருப்பாங்கல்ல?”
விஜயை யோசனையாக பார்த்தவள்,
“எதை வச்சு சொல்றீங்க?” எனக் கேட்டாள் கொஞ்சம் கடுப்புடன்.
“எல்லாம் என் மச்சான் உன் பாசக்கார அண்ணன் சொன்னதை வச்சு தான்,” என்று சொல்லி சிரித்தான் விஜய்!