“அங்கே ஒரு குட்டி பாப்பா தூங்கிட்டு இருக்கு, உங்களுக்கு இப்போ கொஞ்சல்ஸ் தேவையா?” என்றாள்!
“ஹேய் இதென்ன உலக மஹா அநியாயமா இருக்கே. நீ சொல்ற லாஜிக் படி பார்த்தால் உலகத்துல எல்லா குடும்பத்திலேயும் ஒரே ஒரு குழந்தை தானே இருக்கனும்? எப்படி சில வீட்டுல ரெண்டு மூணுன்னு பசங்க இருக்காங்க????”
“ஹையோ...”
“சரி அந்த ஆராய்ச்சியை விட்ருவோம். உனக்கு உன் அண்ணன் சொன்ன ஃபிளாஷ்பேக் தெரியனுமா வேண்டாமா?”
“அது... தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன். ஆனால் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்,” என்று ஆர்வமில்லாதவளாக பாவ்லா செய்துக் கேட்டாள் கீதா.
“சொல்றேன்! ஆனால் ஃபீஸ் இருக்கு. இந்த பக்கம் ஒன்னு அந்த கன்னத்துல ஒன்னு,” என்றான் விஜய் கண்களில் காதல் மின்ன!
“அப்புறம் மண்டையில ஒன்னு! இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?”
“சொல்றேன்... இது குஷி படம் போல...”
“என்ன குழந்தையா இருந்தப்போ இரண்டு பேரும் பார்த்துக்கிட்டாங்களா?”
“ஓகே கண்மணி காலத்துல கூட குஷி படத்தை ஞாபகம் வச்சிருக்கீயே, நீ ரொம்ப நல்ல பொண்ணு கீத்ஸ்”
“ப்ளேட் போடாம சொல்ல வந்ததை சொல்றீங்களா?”
“சரி சரி! நீ டென்ஷன் ஆகாதே! தியாகு நாலு மணி நேரம் உட்கார்ந்து சொன்னதை நான்