உனக்கு ஷார்ட்டா சொல்றேன்.
தியாகு காலேஜ் ஃபைனல் இயர்ல இருந்தப்போ ஒரு இன்டர் காலேஜ் காம்படிஷன்ல பார்டிசிபேட் செய்தானாம். பிரின்சஸும் அதே காம்படிஷனுக்கு வந்திருந்தாளாம். நம்ம ஹீரோ காலேஜ் கப் வின் செய்ய கடைசியா நடந்த பேச்சு போட்டியில வின் செய்தாகனும்னு இருந்துச்சாம். ஆஸ் ஆல்வேஸ் அந்த போட்டியில் சாருக்கு எதிரா இருந்தது நம்ம பிரின்சஸ். என் தங்கை பேச்சு எப்படி இருக்கும்னு உனக்கே தெரியுமே. ஸோ, அவளை பேசி எல்லாம் ஜெயிக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டு, அந்த வயசுக்கே உரிய விதத்துல தியாகு அண்ட் ஃப்ரென்ட்ஸ் ஷார்ட்கட்ல அவளை தோக்கடிக்க நினைச்சிருக்காங்க. அவங்க டீஸ் செய்து கலாட்டா செய்ததுல் கீழே விழுந்து அவளுக்கு கால்ல ஸ்ப்ரேயின். ஒரு மணி நேரத்துல போட்டி, அவ இனி வர மாட்டான்னு இவங்க சந்தோஷமா இருக்க, பிரின்சஸ் கரக்ட் டைமுக்கு டான்னு போய், ஹீரோ சாரை நாறு நாரா பேச்சுல கிழிச்சு போட்டியில ஜெயிச்சுட்டா. அதோட நிக்காம தியாகு கிட்ட போய், அவ ஜெயிச்ச கப்பை கொடுத்து, இதுக்கு தானே இந்த சீப் டாக்டிக் எல்லாம் ஃபாலோ செய்தீங்க. எனக்கு எல்லாம் போட்டியில கலந்துக்குறதும், பெர்ஃபார்ம் செய்றதும் தான் முக்கியம். ஜெயிக்கிறது இரண்டாம் பட்சம். இந்த கப் எல்லாம் அவசியமே இல்லைன்னு சொல்லி கப்பை கிட்டேயே கொடுத்திட்டாளாம்.“
“ஓ! அவரும் வாங்கி கிட்டாராமா?”
“வாங்காமல் என்ன? நீ தியாகுவோட ஆஃபிஸ் போயிருக்கீயா கீத்ஸ்?”
“ஹ்ம்ம்... ஏன்?”
“அவனோட ரூம்ல இருக்க கப்போர்ட் நடுவுல அவன் ஒரு சின்ன கப் வச்சிருக்கான். அது தான் பிரின்சஸ் கொடுத்த இந்த கப்பாம். அன்னைக்கு அவ வலியையும் தாண்டி வந்து ஜெயிச்சது, அவனுக்கு நோஸ் கட் கொடுத்தது எல்லாம் அவனுக்கு பொண்ணுங்க கிட்ட இருந்த ஆட்டிட்யுடை மாத்திச்சாம். சார் அன்று முதல் நல்லவனா, வல்லவனா மாறிட்டாராம்!”
“ம்ம்ம்... ஆனால் இந்த மொக்கை கதைக்கா இவ்வளவு பில்ட் அப் கொடுத்தீங்க?”
“அடிப்பாவி, சொல்லுங்க சொல்லுங்கன்னு கதையை கேட்டுட்டு இப்படி சொல்லுற?”