தான் உங்க பொண்ணு என்னை மட்டும் செல்லம் கொஞ்சுங்கன்னு!”
“ரைட்! நான், ஷிவா, விஷ்ணு மூணுப் பேரும் ஆக்சிடென்ட்ல அம்மா அப்பாவை பறி கொடுத்துட்டு சித்தப்பா வீட்டுக்கு வந்து பதினஞ்சு வருஷம் கிட்ட ஆகப் போகுது. இது வரைக்கும் சித்தி, சித்தப்பா இரண்டுப் பேருமே எங்க மூணு பேரையும் சொந்த பசங்களா தான் நடத்துறாங்க. சித்தப்பா என் மூத்த மகன்னு என்னை எல்லோர் கிட்டேயும் சொல்லும் போது மனசுக்குள்ள அவ்வளவு சந்தோஷமா இருக்கும்! ஆனா பிரின்சஸை பத்தி யோசிச்சு பாரேன்...”
விஜய் சொல்ல வருவது புரிந்து கீதா அமைதியாக இருந்தாள்!
“பிரின்சஸ் சித்தி சித்தப்பாக்கு ஒரே பொண்ணு! அவங்களோட இந்த பாசம் எல்லாம் அவளுக்கு மட்டுமா இருந்திருக்க வேண்டியது. ஆனால் அவ ஒரு நாள் கூட எங்க மூணு பேர் கிட்டேயும் சின்னதா சண்டைன்னு கூட கோபிச்சுக்கிட்டது இல்லை. அவ என் சொந்த தங்கை இல்லைனாலும் அதை விட அதிகம். சிவா, விஷ்ணுவுக்கும் கூட அப்படி தான். நான் அவளை பிரின்சஸ்ன்னு சும்மா கூப்பிடலை. ஐ மீன் இட்!”
“எனக்கு அது தெரியும் விஜய்!”
“கீத்ஸ், நமக்குள்ளே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. சித்தியோட உனக்கு நல்ல rapport இருக்கு. ஃபேமிலில மத்தவங்க யாரும் எனக்கு தெரிஞ்சு நம்ம ரெண்டுப் பேர் பக்கம் வந்து தொல்லை செய்றதில்லை. ஆனாலும், கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வீட்டுல இருந்தது மாதிரி உன்னால என் வீட்டுல 100% ஃப்ரீயா இருக்க முடியுதா???”
கீதா யோசனையுடன் இல்லை என தலை அசைத்தாள்.
“பிரின்சஸும் அப்படி தானே கீத்ஸ்? எங்க கூட இருக்க வரைக்கும் தானே இப்படி சுதந்திரமா இருக்க முடியும்?”
“உங்க intent கரக்ட்ங்க. ஆனால் அவங்களா இருந்தாலும், தப்பு செய்தா தப்புன்னும் யாராவது சொல்லனும் தானே? எனக்கு தெரிஞ்சு உங்க தங்கை அதிகம் என் கிட்ட பேசினதில்லை. ஆனால், பேசின வரைக்கும் எதுவுமே ஞாபகத்தில் வைக்க கூடிய சீன்ஸ் இல்லை.”