(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

அருகே கேட்ட சிவகாமியின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் கீதா.

   

அங்கே சிவகாமியும், கிருத்திகாவும் முகத்தில் கேலி மின்ன நின்றிருந்தார்கள்.

   

“அத்... அத்... அத்தை... எப்போ வந்தீங்க???”

   

“நானும் உங்க ‘அத்’ ‘அத்’ அத்தையும் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு! ஆனாலும் சான்ஸ்லெஸ் அண்ணி. எப்புடி இப்படி கண்ணை திறந்து வச்சுட்டு கனவு காணுறீங்க!!!”

   

“என்னம்மா கீதா? விஜய் ஃபோன் செய்தானா?” என்று தன் பங்கிற்கு சிவகாமியும் கேலியாக கேட்டாள்.

   

சிவந்து மின்னிய முகத்தை இயல்பாக்க முயன்றப்படி,

   

“இல்லை அத்தை... அவர் பேசலை. ஆமாம் டாக்டர் என்ன சொன்னார்?” என்று பேச்சை திசை திருப்பினாள் கீதா.

   

“ப்ச்... என்னத்த சொல்றார், அதையே தான் சொல்றார்! ஏதேதோ டெஸ்ட் செய்ய சொல்லி இருக்கார். எனக்கு இவங்க மேல எல்லாம் நம்பிக்கையே இல்லாம போச்சு. பேசாம கோவில் கோவிலா போய் வேண்டலாம்னு நினைக்கிறேன். சரி, நீங்க பேசிட்டு இருங்க நான் சாரீ மாத்திட்டு வரேன்.”

   

சிவகாமி புலம்பி விட்டு செல்ல, கீதா கிருத்திகாவைப் பார்த்தாள்.

   

அவள் இவள் பார்ப்பதை கவனித்து செல்லமாக கண் சிமிட்டினாள்.

   

“விஜய் அண்ணா அன்னைக்கு லைப்ரரியில சொன்னது தப்பே இல்லை அண்ணி. உங்க கிட்ட இருந்து நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. அம்மா கூட அண்ணா பேசினாரான்னு கேலியா கேட்குற அளவுக்கு இத்தனை வருஷம் உங்க ரொமான்ஸ் மெயின்டெயின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.