(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 11 - சசிரேகா

   

போட்டியின் முதல் நாள் 

   

விடிந்தது.

   

காலையில் வழக்கம் போல் ஜாக்கிங் செல்ல எழுந்த ரிஷிகேசனுக்கு நந்தினியின் நினைவு வர அவசரமாக தன் அறையை விட்டு வெளியேறி நந்தினி இருக்கும் அறைக்கு செல்ல நினைத்தான். வழியில் அவனை தடுத்தார் தாத்தா செல்வகணபதி

   

”எங்கடா போற வாசல் அந்தபக்கம் இருக்கு பாரு தூக்கக்கலக்கத்தில தப்பா நடந்து போற” 

   

“இல்லை தாத்தா அது நந்தினி எப்படியிருக்காள்ன்னு பார்க்கலாம்னு போறேன்”

   

“ஏன்டா காலைல 6 மணிக்கு நீ அவளை ஏன் தேடற மத்த பொண்ணுங்களும் அங்கதான் இருக்காங்க நீ போறதால அவங்களுக்கு கஷ்டமாகிட போகுது பேசாம ஜாக்கிங் போற வேலையை பாரு”

   

“இல்லை நான் எங்கயும் போகலை”

   

“ஏன்”

   

“அது சும்மாதான்”

   

“இதப்பாருடா இப்படி நீ செய்றது மட்டும் உன் பாட்டிக்கு தெரிஞ்சது அந்த பொண்ணை வீட்டை விட்டே விரட்டிடுவா அப்புறம் உனக்குதான் கஷ்டம் பேசாம போ” என தாத்தா சொல்லவும் அவனும் வேண்டா வெறுப்பாக பேருக்கு 1 ரவுண்டு சுற்றி விட்டு 10 நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தான்.

   

நேராக ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த தாத்தாவிடம் வந்து ஹாயாக அமர்ந்தான். அவனைப்பார்த்த தாத்தா

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.